அதிகாலையில் நிலவிய கடுமையான பனிப்பொழிவு.! அடுத்தடுத்து 31 வாகனங்கள் மோதல்.!! பரிதாபமாக பலியான உயிர்கள்.!!  - Seithipunal
Seithipunal


இந்தியாவின் வட மாநிலங்களில் தற்போது கடுமையான குளிரானது வாட்டி வதைத்து வருகிறது. இதன் காரணமாக கடுமையான அளவு பனிப்பொழிவு., பனி மூட்டமும் அதிகரித்துள்ளது. 

காலையில் விடிந்தும் நீண்ட நேரமாக இருக்கும் பனி மூட்டத்தால் வாகனங்களில் முகப்பு விளக்குகளை ஏரியாவிட்டார் போலவே வாகனங்களை வாகன ஓட்டிகள் இயக்கி வருகின்றனர். 

மேலும்., நெடுஞ்சாலை பகுதிகளில் இருக்கும் கடுமையான பனிமூட்டத்தின் காரணமாக அவ்வப்போது சில எதிர்பாராத விபத்துகள் நடந்து கொண்டு இருக்கிறது. அந்த வகையில்., பீகார் மாநிலத்தில் இருக்கும் முசாபர்பூரி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.

முசாபர்பூரி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த பெட்ரோல் டேங்கர் லாரி மற்றும் அதன் பின்னர் வந்த 9 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட துவங்கினர். இந்த விபத்தில் படுகாயமடைந்த 16 நபர்களை மீட்ட அதிகாரிகள் அவசர ஊர்தியின் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும்., இதே போன்று டெல்லியில் உள்ள புறநகர் சாலையில் சென்றுகொண்டு இருந்த காரில் ஏற்பட்ட தீயை அடுத்து., காரில் பயணித்தவர்கள் காரை சாலையின் நடுவில் நிறுத்திவிட்டு பதறியபடி இறங்கி ஓடினர். 

அந்த சமயத்தில் நிலவிய கடுமையான பனிமூட்டத்தின் காரணமாக பின்னால் வந்த 25 வாகனங்கள் அடுத்தடுத்து மோதியதால்., பலர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

due to heavy snow fall huge accident


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->