நகைச்சுவை செய்தி இல்லை…! நிஜமாகவே, நோயாளியின் வயிற்றில் கத்தரிக்கோலை வைத்து தைத்து விட்டு, பொறுப்பற்ற பதலைச் சொன்ன அரசு டாக்டர்கள்….! - Seithipunal
Seithipunal


 

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த மகேஸ் சவுத்ரி என்பவர், கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக, தீராத வயிற்று வலியால் அவதிப் பட்டார். ஐதராபாத்தில் உள்ள நிம்ஸ் அரசு மருத்துவமனையில் பரிசோதித்த போது, அவருக்கு குடல் வால்வு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு, உடனடியாக அந்த அரசு மருத்துவமனையில், அறுவை சிகிச்சை செய்யப் பட்டது.

ஆபரேசன் முடிந்து, ஓய்விற்காக வீட்டிற்குச் சென்றார். பின், அவருக்கு ஆபரேசன் செய்த இடத்தில் மற்றும் வயிற்றில் ஏதோ குத்திக் கொண்டிருப்பது போன்ற வலி ஏற்பட்டு, துடித்துப் போனார்.

இதனால், ஆபரேசன் செய்த ஆஸ்பத்திரியிலேயே, வயிற்று வலிக்கான காரணம் என்ன? என்று டாக்டர்களிடம் கேட்டார். ஆபரேசன் செய்துள்ளதால், சிறிது நாட்களுக்கு வயிற்று வலி இருக்கத் தான் செய்யும், என்று டாக்டர்கள் பொறுப்பில்லாமல் பதில் சொல்லி, அந்த  நோயாளியை அனுப்பி வைத்தனர்.

 

ஆனால், சவுத்ரிக்கு, நாளுக்கு நாள் வயிற்று வலி அதிகரித்துக் கொண்டே போனது. வலியால் அலறித் துடித்தார்.

இதனால், அவர் உடனடியாக  ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டார். அங்கு அவருக்கு எக்ஸ்ரே எடுக்கப் பட்டது. அந்த எக்ஸ்ரே படத்தில், சவுத்ரியில் வயிற்றில், மருத்துவர்கள் ஆபரேசனுக்கு வைத்திருந்த கத்தரிக்கோலை, மறதியாக அவரது வயற்றுக்குள்ளே வைத்து தைத்திருந்தது தெரிய வந்தது.

இது குறித்து, நிம்ஸ் மருத்தவமனையில், தனக்கு ஆபரேசன் செய்த டாக்டர்களிடம் கேட்ட போது, தங்களுக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, என்று அலட்சியமாகப் பதில் கூறி உள்ளனர்.

இதனால், நொந்து போன சவுத்ரி, தன் உறவினர்களுடன், மருத்துவனையின் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்தார். தகவல் அறிந்து உடனே அங்கு வந்த போலீசார்,  அவர்களைச் சமாதானப் படுத்தி அனுப்பி வைத்தனர்.

மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Doctors irresponsible answer ,against their careless big mistake


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->