பாஜக தேர்தல் அறிக்கை - கொந்தளித்த திமுக..! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர். அந்த வகையில், மத்தியில் ஆளும் பா.ஜனதா கட்சி இன்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில், பொது சிவில் சட்டம் அமல், ஒரே நாடு- ஒரே தேர்தல் என்பவை உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்று இருந்தன.

இந்த நிலையில், பாஜகவின் தேர்தல் அறிக்கையை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. அதன் படி, தமிழகத்தில் ஆளும் தி.மு.க, பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கையை சாடியுள்ளது. இது தொடர்பாக தி.மு.க. செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருப்பதாவது:-

"வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்தியாவின் பெருமையை சிதைக்க பா.ஜனதா முயல்கிறது. பா.ஜனதாவை ஏற்காத மாநிலங்களில் கூட அதன் கொள்கையை திணிப்பதுதான் ஒரே நாடு ஒரே தேர்தல் முறை. வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்தியாவின் பெருமையை சிதைக்க பா.ஜனதா முயல்கிறது. 

ஓரிருவர் பாஜகவிற்கு ஆதரவாக இருந்தாலும் அதனை இந்த தேர்தல் அறிக்கை மாற்றிவிடும். தேர்தலில் அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றாதவர்கள் பா.ஜ.க.வினர். தமிழகத்தில் வாக்குகளை பெறுவதற்காக எதை வேண்டுமானாலும் கூறுவதுதான் பா.ஜனதாவின் கொள்கை" என்றுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk criticized bjp election manifesto


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->