திடீர் திருப்பம்! ஏழுமலையானான் கோவிலுக்கு பக்தர்கள் வரலாம்!! அதிரடி அறிவிப்பு!!! - Seithipunal
Seithipunal


19-ஆம் தேதி திருப்பதி கோயிலுக்கு பக்தர்கள் திரண்டு வர வேண்டும் என தலைமை அர்ச்சகர் ரமண தீட்சதலு அழைப்பு விடுத்திருக்கிறார். 

கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பதி கோயில் மடப்பள்ளியில் சீரமைப்பு பணிகள் நடைபெற்றதாக கூறப்பட்டது. ஆனால் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சதலு இதற்கு மறுப்பு தெரிவித்து இருந்தார்,சில அரசியல்வாதிகளுடன் அதிகாரிகளும் சேர்ந்து கொண்டு புதையல் தோண்டும் பணியில் ஈடுபடுவதாக பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.

இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 9-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை கும்பாபிஷேகம் நடைபெறுவதால் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தேவஸ்தானம் சார்பில் கூறப்பட்டு இருந்தது. இந்நிலையில் இதுகுறித்த ரமண தீட்சதலு கூறுகையில் புதையலை எடுப்பதற்காகவே கோயிலுக்கு வர பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இது இந்துக்களுக்கு எதிரானது. எனவே பக்தர்கள் அனைவரும் வரும் 19-ஆம் தேதி திருப்பதி கோயிலுக்கு வருமாறு அர்ச்சகர் ரமண தீட்சதலு பரபரப்பு அழைப்பு விடுத்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

devotees can come to the temple in thirupathi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->