சர்ச்சை வீடியோ விவகாரம்: கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தேவகெளடாவின் பேரன்.! - Seithipunal
Seithipunal


கர்நாடகா, ஹூப்ளி தொகுதி மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணா பல பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது. 

இதற்கிடையே அவர் வெளிநாட்டிற்கு தப்பித்து சென்று விட்டார். இந்த வீடியோ தொடர்பாக விசாரணை நடத்த கர்நாடகா அரசு சிறப்பு விசாரணை குழு நியமித்துள்ளது. 

அவர்கள் இதுகுறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து ரேவண்ணாவை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என மூத்த நிர்வாகிகள், கட்சி எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். 

அதன் அடிப்படையில் கர்நாடகா மாநிலம், ஹூப்ளியில் இன்று மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் , மூத்த நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் பங்கேற்றனர். 

இந்நிலையில் தவறான வீடியோ மூலம் சர்ச்சையில் சிக்கிய பிரஜ்வால் ரேவண்ணாவை இது குறித்து விசாரணை முடியும் வரை கட்சியிலிருந்து நீக்குவதாக தெரிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Devegowda grandson suspends party


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->