டெங்கு உயிரிழப்பில் தமிழ் நாடு முதலிடம் : மத்திய அரசு அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


டெங்கு காய்ச்சலால் ஏற்பட்டுள்ள உயிரிழப்பில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால், தினந்தோரும் ஆயிரக்கணக்கானோர் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக செல்கின்றனர்.

டெங்கு காய்ச்சலால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கண்டே செல்கிறது. இதுவரை 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன.

ஆனால், தமிழக சுகாதாரத்துறையோ இதுவரை வெறும் 40 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளதாக அறிவித்துள்ளது. மற்றவர்கள் மர்ம காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் போன்றவற்றால் உயிரிழந்துள்ளனர் என்று கூறியுள்ளது.

இதற்கு, டெங்கு பாதிப்பிலிருந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அரசு உண்மையை மறைத்து பிரச்சினையை மூடி மறைக்க முயல்கிறது என்று எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் நாடு முழுவவதும் டெங்கு பாதிப்பு குறித்த புள்ளி விவரத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

அதில், நாடு முழுவதும் 87 ஆயிரத்து 18 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 151 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அதில், கேரளாவில் 18 ஆயிரத்து 908 பேரும், கர்நாடகாவில் 13 ஆயிரத்து 235 பேரும், தமிழகத்தில் 12 ஆயிரத்து 945 பேரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று, டெங்கு காய்ச்சலால் தமிழகத்தில் 40 பேரும், கேரளாவில் 35 பேரும் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய குழு தமிழகத்தில் ஆய்வு நடத்திய பிறகு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dengue death TN is first place


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->