# சற்று முன் || வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைவு.!! - Seithipunal
Seithipunal


# சற்று முன் || வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைவு.!!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம் மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதம்தோறும் நிர்ணயித்து வருகின்றன. 

அதன் அடிப்படையில் கடந்த 2 மாதம் வர்த்தகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டது. இந்த நிலையில், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ₨157.50 குறைக்கப்பட்டுள்ளது.

அதாவது செப்டம்பர் மாதம் பிறந்த முதல் நாளே வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ₨1,852.50-யில் இருந்து ₨1,695க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஏற்கனவே வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் விலை ஏற்கனவே ₨200 குறைக்கப்பட்ட நிலையில், தற்போது.வணிக சிலிண்டர் விலையும் குறைந்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

commercial use gas cylinder price decrease


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->