அதிகாலையிலேயே அதிர்ச்சி - வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை அதிரடி உயர்வு.! - Seithipunal
Seithipunal


அதிகாலையிலேயே அதிர்ச்சி - வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை அதிரடி உயர்வு.!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

அதன் படி, ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாடு கேஸ் சிலிண்டர்களின் விலை மாற்றம் செய்யப்படுகிறது. அந்த வகையில் இன்று முதல் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த மாதம் வணிக பயன்பாட்டிற்கான  சிலிண்டர் 1,695 ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால், இந்த மாதம் 203 ரூபாய் உயர்ந்து 1,898 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த திடீர் விலை ஏற்றத்தால் தள்ளுவண்டி கடை முதல் பெரிய ஹோட்டல் நடத்துவோர் அனைவருக்கும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இருப்பினும், 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லாமல், ரூ.918.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஜூலை மாதம் முதல் தொடர்ந்து சரிந்துவந்த வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

commercial use cylinder price increase


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->