மூச்சுக்கு மூச்சு மரணத்துக்கு அருகில் செல்கிறோம்: ஹர்பஜன் சிங் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்..? - Seithipunal
Seithipunal


தீபாவளிக்கு பிறகு புதுடெல்லியில் காற்றின் தரம் அளவு என்பது மிக மோசமான நிலையை கடந்துள்ளது.

டெல்லியில் மாசு குறிப்பாக கரியமிலவாயு, பாதரசத்தின் கூறுகள் உள்ள மாசு மற்றும் கழிவுகள் அபாயகரமான அளவில் கூடி விட்டதால் கடந்த ஒரு வார காலமாகவே மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

சுற்றுச்சூழல் படு நாசமடைந்துள்ளதை அடுத்து கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், வாழ்க்கை நரகமாகிவருகிறது என்று சாடியுள்ளார்.

அடுத்த மாதம் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும் என்று, ‘அறியாத’ சமூகவலைத்தள தாரர்கள் கூறுவதை கடுமையாகச் சாடிய ஹர்பஜன் சிங், ஒவ்வொரு மூச்சுக்கும் சுடுகாட்டுக்கு அருகில் சென்று வருகிறோம்.

நாளுக்குநாள் மோசமடைந்துதான் வருகிறது. சுற்றுச்சூழலை நரகமாக்கி விட்டோம் என்று கூறியுள்ளார்.“நம் சுற்றுச்சூழலை நரகமாக்கி விட்டோம்.

ஒவ்வொரு மூச்சுக்கும் சுடுகாட்டுக்கு அருகில் வந்து விட்டுச் செல்கிறோம், மரணத்தின் அருகில் இருக்கிறோம்” என்றும் அவர் டுவிட்டரில் சாடியுள்ளார்.

டெல்லியில் புகை பனி மூட்டம் மற்றும் காற்று மாசுபாடு ஆகிவற்றின் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த புகை மாசில் கார்சினோஜென் எனப்படும் புற்று நோய் உருவாக்குவதற்கான காரணிகளும் இருப்பதால் நிலைமை மோசமாகி வருகிறது.

தேசிய பசுமை தீர்ப்பாயம் தேசிய தலைநகர் பிராந்திய பகுதியில் மோசமான காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளதற்கு டெல்லி, அரியானா மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களை கடுமையாக சாடியுள்ளது.

இத்தகைய மோசமான நிலையில் அங்கு சுகாதார அவசர நிலை பிரகடனப்படுத்தப்படவும் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

In two tweets, Harbhajan said that we are coming closer to death with every breath we take in this ‘hell’ climate. He also said that it is getting worse every day. He tweeted, “We have made our climate a hell..with every breath we r coming closer to our graveyard.. #seriousissue #warningsign #endisnear” “Biggest problem is we r so ignorant we feels this is fine it will get better next month bt truth is it’s getting worst everyday every


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->