ஐடியா கொடுத்த தாய், போட்டு தள்ளிய சிறுவன்! விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்.! - Seithipunal
Seithipunal


டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் வீரேந்தர் குமார் . 78 வயது நிறைந்த இவர் மனைவி சரளாவுடன் தனியாக வசித்து வந்த நிலையில் , கொலை செய்யப்பட்டு உடல்கள் அழுகிய நிலையில் கடந்த 26 ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டனர் 

இந்நிலையில் இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் குடியிருப்பின் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில்  சிறுவன் ஒருவன் சந்தேகப்படும் வகையில் நடந்துகொண்டது தெரியவந்தது.

அந்தச் சிறுவனைப் பிடித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டபோது, தான் வீரேந்திர குமார் வீட்டில் வேலை செய்த பெண்மணியின் மகன் எனவும்,பணத்திற்காகதான் வயதான தம்பதியினரைக் கொலைசெய்ததாகவும் ஒப்புக்கொண்டார்.

            

அதனை தொடர்ந்து அந்த சிறுவன் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது, எனது தாய்தான் இந்த கொலையை செய்வதற்கு திட்டம் போட்டு கொடுத்தார். சம்பவதன்று வேலைக்கு சென்ற எனது அம்மாவுடன் நானும் சென்றேன்.அங்கு சரளா மட்டும் இருந்தார். பின்னர் எனது அம்மா வேலைகளை முடித்துவிட்டு திரும்பிவிட்டார் , நான் வீட்டிற்குள் மறைந்துகொண்டு, சிறிது நேரத்திற்கு பிறகு சரளாவிடம் பீரோ சாவியை  கேட்டேன், அவர் சாவி இல்லை தனது கணவரிடம் இருப்பதாக கூறினார்.

பின்னர் சரளாவை கீழே தள்ளி கொலைசெய்துவிட்டு அவர் கணவர் வரும் வரை மறைந்திருந்தேன். பின்னர், வீட்டுக்கு வந்த நரேந்திர குமாரிடம்  கத்தியை காட்டி மிரட்டி சாவியை கொடுக்கும்படி கேட்டேன், அவரும் பயத்தில் சாவியைக் கொடுத்தார்.பின்னர்  அவரது கழுத்தில் கத்தியால் கீறிவிட்டு, வீட்டில் இருந்த பணம் நகைகளைக் கொள்ளையடித்துவிட்டு மறுநாள் காலை அங்கிருந்து வெளியேறினேன் என வாக்குமூலம் அளித்துள்ளான்.

இதனை தொடர்ந்து போலீசார் சிறுவன் மற்றும் அவனது தாயை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

child killed 2 ole people for money by mother guidence


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->