ஆண்களுக்கு தான் சட்டம்.! பெண்களுக்கு இன்னும் சட்டம் போடல.! உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்.!! - Seithipunal
Seithipunal


உச்சநீதிமன்றத்தில், கணவனை ஏமாற்றி காதலனுடன் உடலுறவு வைத்துக் கொள்ளும் பெண்களை தண்டிக்க இந்திய சட்டத்தில் இடம் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் ஆண்–பெண் சமத்துவத்திற்கு எதிரானதாக இருக்கும் ஐ.பி.சி 497வது பிரிவை நீக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும், அந்த மனுவில், ''கள்ளக்காதலில் ஈடுபடும் தன் மனைவிக்கு எதிராக ஒரு கணவன் புகார் கொடுத்தால், மனைவியுடன் உடலுறவு வைத்துக் கொண்ட அந்த ஆணுக்கு மட்டுமே தண்டனை கொடுக்கப்படுவதாகவும், மேலும் கணவன் கள்ளக்காதலில் ஈடுபட்டால் மனைவியால் புகார் கொடுக்க முடியாத நிலை இருப்பதாகவும்'' தெரிவிக்கப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற மூன்று நீதிபதிகள் அமர்வு முன்பு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம், ''கள்ளக்காதல் விவகாரத்தில் ஆண் – பெண் சமத்துவம் இல்லையே ஏன்?'' என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 

நீதிபதிகளின் கேள்விக்கு பதிலளித்த மத்திய அரசு வழக்கறிஞர், ''செக்சன் 497-ன் படி, வேறொரு ஆணின் மனைவியுடன், அந்த ஆணின் சம்மதம் இல்லாமல் உடலுறவு வைத்துக் கொள்ளும் ஆண் மீது மட்டுமே சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும் என்றும், அந்த ஆண் மீதான குற்ற புகார் உறுதி செய்யப்பட்டால் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க முடியும் என்றும், அதே சமயத்தில் இந்த குற்றம் செய்ய தூண்டியவராக பெண் கருத முடியாது என்றும் சட்டத்தில் கூறப்பட்டுள்ளதாக'' மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். 

மேலும், ''கள்ளக்காதலில் ஈடுபடும் பெண்களை தண்டிக்க சட்டத்தில் இடம் இல்லை. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட்டு ஒரு தீர்வை வழங்கலாம் என்றும், அதற்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும்'' என்றும், மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணையை நீதிபதிகள் அமர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CENTRAL GOVT NEW INFORMATION ABOUT ILLEGAL AFFAIR


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->