இனி அனைத்து கோயில்களிலும் செல்போன் பயன்படுத்த தடை - மாநில அரசு அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


மத வழிபாட்டு தலங்களுக்குள் செல்போன் மற்றும் கேமரா உள்ளிட்ட உபகரணங்கள் எடுத்துச் செல்வதற்கு பல மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதுபோன்ற உபகரணங்களை எடுத்து செல்வதால் அந்த இடங்களுக்கான புனிதத் தன்மை மீறப்படுவதாக சிலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து கோயில்களுக்குள் செல்போன் எடுத்துச் செல்வதற்கு தடை விதிக்க வேண்டும் என பலர் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

மேலும் கோயிலுக்குள் செல்போன் எடுத்துச் செல்வதால் மற்ற பக்தர்களுக்கும் அங்கு வேலை செய்யும் பணியாளர்களுக்கும் சங்கடங்கள் ஏற்படுத்த வாய்ப்புள்ளதால் கோயில்களுக்குள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள அனைத்து கோயில்களுக்குள்ளும் செல்லும்போது பக்தர்கள் தங்களின் செல்போன்களை ஸ்விட்ச் ஆப் செய்து கொள்ள வேண்டும் என அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதேபோல் கோயில்களுக்குள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அறிவிப்பு பலகைகளை வைக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cellphones not allowed in temple in Karnataka


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->