சிறையில் கைது செய்யப்பட்ட கவிதா.! அதிரடி காட்டிய சி.பி.ஐ அதிகாரிகள்.! - Seithipunal
Seithipunal


டெல்லி மதுபான கொள்கை வழக்குத் தொடர்பாக தெலங்கானா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கே.கவிதா கடந்த மாதம் 15-ந்தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரிடம் விசாரணை நடத்த நீதிமன்றத்தில் சி.பி.ஐ .அனுமதி கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தது. அதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்ததன் அடிப்படையில் சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த சனிக்கிழமை அவரிடம் விசாரணை நடத்தியது. இந்த நிலையில் சி.பி.ஐ. அதிகாரிகள் கே.கவிதாவை கைது செய்ததாக தெரிவித்துள்ளனர். 

இதற்கிடையே, சி.பி.ஐ. விசாரணை நடத்தியது தொடர்பாக கே.கவிதா நீதிமன்றத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் சி.பி.ஐ.,-யின் விசாரணை ஊடக விசாரணை. அது என்னுடைய நற்பெயரை பாதிப்பதாகவும், தனியுரிமையை மீறுவதாகவும் தெரிவித்திருந்தார்.மேலும், நான் பாதிக்கப்பட்டவர். என்னுடைய தனிப்பட்ட மற்றும் அரசியல் நற்பெயர் குறி வைக்கப்படுகிறது. 

என்னுடைய டெலிபோன் அனைத்து டி.வி. சேனல்களிலும் காண்பிக்கப்பட்டுள்ளது. இது தன்னுடைய தனியுரிமையை நேரடியாக மீறுவதாகும். நான் ஏஜென்சியின் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்துள்ளேன. வங்கி கணக்கு தொடர்பான அனைத்து தகவல்களையும் கொடுத்துள்ளேன். நான் அழித்துவிட்டதாக அமலாக்கத்துறை கூறும் அனைத்து போன்களையும் ஒப்படைப்பேன" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CBI officer arrest kavitha for delhi liquor case


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->