கார் மோதி பெண் உயிரிழப்பு: பிரபல கன்னட நடிகர் அதிரடி கைது!  - Seithipunal
Seithipunal


கர்நாடகா, பெங்களூரில் பிரபல கன்னட காமெடி நடிகரான நாகபூஷன் எஸ்எஸ் காரை தாறுமாறாக ஓட்டி வந்ததில் ஏற்பட்ட விபத்தினால் பெண் ஒருவர் உயிரிழந்தார். 

அலட்சியமாக காரை ஓட்டி வந்து உயிருக்கு ஆபத்தை விளைவித்தல் உள்ளிட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். 

இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது, கன்னட திரைப்பட நடிகர் நாகபூஷன் பல்வேறு காமெடி வேடங்களில் நடித்து பிரபலமானவர். 

இவர் நேற்று முன்தினம் இரவு உத்தரகள்ளியில் இருந்து கொனனகுண்டே நோக்கி அவரது காரில் வேகமாக சென்றுள்ளார். 

அப்போது அவரது கட்டுப்பாட்டை இழந்த கார் வசந்தபுரா பிரதான சாலையில் உள்ள மின்கம்பத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. 

இதற்கு முன்னதாக சாலை நடைபாதையில் சென்று கொண்டிருந்த கிருஷ்ணா (வயது 58) மற்றும் பிரேமா (வயது 48) என்ற தம்பதி மீது கார் வேகமாக மோதி உள்ளது. இதில் பலத்த காயமடைந்த அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இருப்பினும் பிரேமா என்பவர் மருத்துவமனைக்கு செல்வதற்குள் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். அவரது கணவர் கிருஷ்ணா என்பவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதனால் நடிகர் நாகபூஷன் மீது அலட்சியமாக கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய பிரிவில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்யப்பட்டுள்ளது. 

குமாரசாமி லே-அவுட் போக்குவரத்து காவல் நிலையம் இந்த விபத்து நடைபெற்றதால் அங்குள்ள போலீசார் காரை பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

car accident Woman killed Famous Kannada actor arrested


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->