அவசர சட்டங்களுக்கு உத்தரவு பிறப்பித்த மத்திய அரசு - பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் எடுக்கப்பட்ட அதிரடி முடிவு.! - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றதில் பல்வேறு காலாவதியான மசோதாக்களை அவசர சட்டமாக்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஒரு சட்டம் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு, அது ஆறு மாத காலத்திற்குள் மாநிலங்களவையின் ஒப்புதலை பெற வேண்டும்.

அப்படி பெறாதவை காலநீட்டிப்பு செய்யப்படாமல் கிடப்பில் போடப்படும். அவை காலாவதியானதாக அறிவிக்கப்படும்.

இது போன்ற சில மசோதாக்கள் நேற்று அவசர சட்டமாக உருபெற்றுள்ளது. அதில், முத்தலாக் முறைக்கு எதிரான முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு, இந்திய மருத்துவ கவுன்சிலின் இடைக்கால கமிட்டி, கம்பெனிகள் சட்டத்தில் திருத்தம் மற்றும் நிதி நிறுவனங்கள், ஒழுங்குபடுத்தப்படாத வைப்பு நிதி திட்டங்களை கட்டுப்படுத்தும் புதிய சட்டம் ஆகிய 4 அவசர சட்டங்களுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இவை அனைத்தும்  மக்களவையில் நிறைவேற்றப்பட்டு, மாநிலங்களவையில் நிறைவேற்றப்படாததால் காலாவதியானது. இதனுடன் சேர்த்து புதிய மின்னணு கொள்கை உருவாக்கவும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cabinet-Committee-Approves-4-Law


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->