போஃபர்ஸ் ஊழல் : ராஜிவ் காந்தி மீது அமெரிக்க நிறுவன தலைவர் குற்றச்சாட்டு..! விசாரிக்க சிபிஐ முடிவு..!! - Seithipunal
Seithipunal


போஃபர்ஸ் ஊழல் விவகாரம் தொடர்பாக முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி மீது அமெரிக்க துப்பறியும் நிறுவனத் தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளதால் சிபிஐ விசாரிக்க முடிவு செய்துள்ளது.

அமெரிக்காவின் தனியார் துப்பறியும் நிறுவனமான பேர்ஃபேக்ஸ்-ன் தலைவர் மைக்கேல் ஹெர்ஷ்மேன், போஃபர்ஸ் ஊழல் குறித்த விசாரணையை தடுக்க அப்போது பிரதமராக இருந்த ராஜிவ் காந்தி அரசு   சதி செய்ததாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

கடந்த வாரம், இந்தியா வந்திருந்த மைக்கேல் ஹெர்ஷ்மேன், தனியார் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில், போஃபர்ஸ் ஊழல் மூலம் பெறப்பட்ட பணம், சுவிஸ் வங்கிகளில் உள்ள கணக்குகளில் போடப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டினார்.

இந்நிலையில், அவரின் குற்றச்சாட்டுகளை முன்வைத்து விசாரணை நடத்தப் போவதாக, சிபிஐ தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து சிபிஐ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், போஃபர்ஸ் ஊழல் குறித்து மைக்கேல் ஹெர்ஷ்மேன் அளித்த பேட்டி சிபிஐ கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bofors gun scam CBI will inquiry


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->