வேகமெடுக்கும் பறவை காய்ச்சல் - மனிதனுக்கு ஆபத்தா? - Seithipunal
Seithipunal


கேரளா மாநிலம் எடத்துவா கிராம பஞ்சாயத்து மற்றும் செருதானா கிராம பஞ்சாயத்தில் உள்ள வாத்துகளின் ரத்த மாதிரிகள் சிலவற்றில் ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் எனப்படும் பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நோய் மனிதனுக்கு எப்படி ஏற்படுகிறது அதன் அறிகுறிகள் என்னென்ன என்பது குறித்து காண்போம்.

காரணங்கள்: * பறவை காய்ச்சல் பாதிக்கப்பட்ட பறவைகளின் உமிழ் நீர் சளி மற்றும் நீர் துளிகள் மனிதனின் காது மூக்கு மற்றும் கண்களின் மூலமாக மனித உடலுக்கு பரவுகிறது.

* கர்ப்பிணிப் பெண்கள், குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் மற்றும் வயதானவர்கள் பெரும்பாலும் பறவைக் காய்ச்சலால் நோய்வாய்ப்படும் அபாயம் அதிகம்.

அறிகுறிகள்: * பறவை காய்ச்சல் வைரஸ் தொற்றினால் ஒருவர் பாதிக்கப்பட்டு இருந்தால் அதன் அறிகுறிகள் இரண்டு அல்லது மூன்று நாட்களில் தெரியும். முதலில் சாதாரண சீசன் காய்ச்சல் போன்று இருக்கும். ஆனால் நாட்கள் செல்ல செல்ல தீவிர பாதிப்பை ஏற்படுத்தும்.

இருமல், சளி, தலைவலி, சோர்வு, குமட்டல், தசைவலி, அதிக காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு, வெண்படல அழற்சி, வயிற்று வலி மற்றும் மூக்கில் இருந்து இரத்தம் வருதல் ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.

இந்த நோய் லேசானது முதல் கடுமையானது வரை மாறுபடும், சில சமயங்களில் அது ஆபத்தானதாகவும் இருக்கலாம். இது 7 முதல் 15 நாட்கள் வரை நீடிக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

birds fever found in kerala


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->