வேகமெடுக்கும் பறவைக் காய்ச்சல்: கோழி - முட்டை கொண்டு வர தடை! - Seithipunal
Seithipunal


கேரளாவில் பறவை காய்ச்சல் பாதிப்பு எதிரொலியாக தமிழகத்தில் எல்லை மாவட்ட பகுதிகளில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு கிருமி நாசினி தெளித்து பிறகு உள்ளே அனுப்பபடுகிறது. இதுகுறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருப்பதாவது, 

நீலகிரி மாவட்டத்திலும் பறவை காய்ச்சல் நோய் பரவாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. கேரளா மற்றும் கேரளா எல்லை பகுதிகளில் இருந்து கோழி இனங்கள், முட்டைகள், கோழியினை எச்சம் மற்றும் கோழி தீவனங்கள் போன்றவை ஏற்றி வருவதை தீவிர கண்காணிப்பு செய்ய 8 சோதனை மட்டும் மற்றும் தடுப்பு சாவடிகளின் கால்நடை உதவி மருத்துவர் தலைமையிலான ஒரு கால்நடை ஆய்வாளர் மற்றும் ஒரு கால்நடை பராமரிப்பு உதவியாளர் கொண்ட குழு தீவிர தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

பறவை காய்ச்சல் நோய் பரவாமல் இருக்க பண்ணையாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோழி, வான்கோழி முதலிய பல்வேறு இன பறவைகளை ஒரே பண்ணையில் வைத்து வளர்க்க கூடாது. 

மாதத்திற்கு ஒரு முறை கிருமி நாசினி கொண்டு பண்ணை உபகரணங்களை சுத்தம் செய்ய வேண்டும். கோழி பண்ணையில் அசாதாரண இறப்புகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள கால்நடை உதவி அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். 

பறவை காய்ச்சல் பாதித்தால் தலை மற்றும் கொண்டை வீக்கம், கொண்டையில் நீல நிறம் பரவுதல், சோர்வு, அதிக அளவில் இறப்பு, கோழிகளின் தசைகளில் ரத்தக்கசிவு, மூச்சு குழலில் அதிக சளி போன்ற கோளாறுகள் காணப்படும். 

இந்த அறிகுறிகள் இருக்கும் பொழுது உடனடியாக கால்நடை மருத்துவ ஆய்வாளரை அணுக வேண்டும். மேலும் தற்காலிகமாக கேரள மாநில பிற பகுதிகளில் இருந்து கோழி, முட்டைகள், கோழி எச்சம், கோழி தீவனம் போன்றவை வாகனங்களில் ஏற்றி வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bird flu reverberations ban import chicken eggs


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->