முதல்வர் பதவிக்காக 5முறை அந்தர் பல்டி அடித்த நிதிஷ்குமார்  - Seithipunal
Seithipunal


2013ம் ஆண்டு முதல் இன்று வரை நிதிஷ் குமார் மொத்தம் 5 முறை தனது முதல்வர் பதவிக்காக கூட்டணியை மாற்றி உள்ளார்.

முதல் முதலாக நிதிஷ் குமார் 2013ல் கூட்டணியை மாற்றினார். அப்போது பீகாரில் நிதிஷ் குமாரின் ஜேடியூ மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடந்தது. பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டார். இது பிடிக்காமல் பாஜகவுடனான உறவை முறித்துக்கொண்டார். 

2014 லோக்சபா தேர்தலில் ஜேடியூ தோல்வியடைந்த நிலையில் அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து ஜித்தன் ராம் மஞ்சியை அவர் முதல்வாராக்கினார். இவர் 2014 மே மாதம் 2015 பிப்ரவரி மாதம் வரை முதல்வராக இருந்தார்.

அதன்பிறகு 2015 சட்டசபை தேர்தலில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரசுடன் இணைந்து போட்டியிட்டு நிதிஷ் குமார் முதல்வரானார். லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வரானார். அவருக்கு அப்போது வயது 26 தான். இது நிதிஷ் குமாருக்கு பிடிக்கவில்லை.இதனால் கூட்டணியில் பிரச்சனை கிளம்பியது. இதையடுத்து மத்திய அரசு ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டு வந்தது. இதையடுத்து ஆர்ஜேடி, காங்கிரஸ் கூட்டணியை விட்டு விலகிய நிதிஷ் குமார் பாஜகவுடன் இணைந்து மீண்டும் முதல்வரானார்.

மீண்டும் 2020ல் நடந்த தேர்தலில் பாஜகவுடன் சேர்ந்து நிதிஷ் குமார் கூட்டணி அமைத்து போட்டி வெற்றி பெற்றது. இதையடுத்து பாஜக உதவியுடன் மீண்டும் நிதிஷ் குமார் முதல்வரானார். ஆனால் 2022ல் நிதிஷ் குமாரிடம் இருந்து முதல்வர் பதவியை பறிக்க பாஜக நினைப்பதாக கருதிய அவர் இந்த கூட்டணியை முறித்தார். மாறாக அவர் ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தார். 

இதன்மூலம் மீண்டும் முதல்வரான நிதிஷ் குமார் தற்பாது அந்த கூட்டணியையும் முறித்து மீண்டும் பாஜகவுடன் கைகோர்த்துள்ளதோடு இன்று மீண்டும் முதல்வராக அவர் பொறுப்பேற்க உள்ளார். 

இப்படியாக தொடர்ந்து நிதிஷ் குமார் பீகாரில் கூட்டணியை மாற்றி மாற்றி  தொடர்ந்து முதல்வர் பதவியை அனுபவித்து வருகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BIHAR POLITICS NDA NITISHKUMAR


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->