இறைச்சி கடைக்காரர் சுட்டுக்கொலை: திடீர் போராட்டத்தில் பொதுமக்கள்! - Seithipunal
Seithipunal


பீகார், முசாபர்பூர் ராம்பாக் சவுக் பகுதியில் அப்ரோஸ் காத்ரி என்பவர் இறைச்சி கடை வைத்து நடத்தி வந்தார். இவர் தனது கடைக்கு நேற்று முன்தினம் நடந்து சென்று கொண்டிருந்தபோது இரு சக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் துப்பாக்கியால் அவரை சுட்டனர். 

இதில் அப்ரோஸ் தலையில் குண்டு பாய்ந்து நடுரோட்டில் சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்து விட்டார். பின்னர் குற்றவாளிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். 

இந்த கொடூர சம்பவம் பட்டப் பகலில் அரங்கேறியதால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள உடனடியாக சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

மேலும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். 

இதனை அடுத்து போலீசார் அப்ரோஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். 

இந்நிலையில் இறைச்சி கடைக்காரர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bihar meat shop owner dead


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->