புத்தாண்டு கோலாகல கொண்டாட்டம்! புதுச்சேரியில் மது விற்பனைக்கு பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் ஆண்டுதோறும் ஆங்கிலப் புத்தாண்டு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் புத்தாண்டு பிறப்பதற்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில், புதுச்சேரியை நோக்கி  வெளி மாநிலங்கள் மட்டுமல்லாது, வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். 

இதனால், புதுச்சேரியில் உள்ள பல நட்சத்திர ஓட்டல்களில், அறைகள் தற்போதே நிரம்பி வழிகின்றன. 2019ஆம் ஆண்டை வரவேற்கும் வகையில் நட்சத்திர ஹோட்டல்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கின்றன.
இந்நிலையில் அனுமதியின்றி நடன நிகழ்ச்சிகளோ, இசை நிகழ்ச்சிகளோ நடத்தப்பட்டால், சம்பந்தப்பட்ட ஓட்டல் உரிம‌ம் ரத்து செய்யப்படும் என  நகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில் புதுச்சேரியில் வழக்கமாக, இரவு 11 மணிக்கு மூடப்படும் மதுபான கடைகள், புத்தாண்டை முன்னிட்டு 1 மணி வரை திறக்க கலால்துறை சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது. 
 
இதனை தொடர்ந்து புத்தாண்டில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் தவிர்க்க பொதுமக்கள் அதிகம் கூடும் கடற்கரை பகுதிகளில், 8 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படவுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bar shop allowed for open up to 1pm in puducherry


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->