நடந்து முடிந்த தேர்தலில் பெண் சட்டமன்ற உறுப்பினர்களே இல்லாத சட்டசபை! இப்படியொரு மாநிலமா? - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஷ்கர், மிசோரம் மற்றும் தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இந்த தேர்தல் முடிவுகளில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கிறது. மிசோரத்தில் மிசோரம் தேசிய கட்சி ஆட்சி அமைக்கிறது. தெலுங்கானாவில் டிஆர்எஸ் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. இந்த தேர்தலில் பாஜக அனைத்து மாநிலங்களிலும் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது.

நடந்துமுடிந்த மிசோரம் சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 40 இடங்களில் மிசோரம் தேசிய கட்சி 26 இடங்களும், காங்கிரஸ் கட்சி 5 இடங்களும், பாஜக 1 இடங்களும், சுயேச்சை வேட்பாளர்கள் 8 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். இந்நிலையில், மிஸோரம் சட்டசபையில் ஒரு பெண் வேட்பாளர் கூட இல்லை என்ற தகவல் வந்துள்ளது.

மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 209 வேட்பாளர்கள் களத்தில் குதித்தனர். இதில் 15 வேட்பாளர்கள் அடங்குவர். மிசோரம் தேசிய கட்சி சார்பாக ஒரு பெண் வேட்பாளரை கூட நிறுத்தவில்லை. மேலும் போட்டியிட்ட 15 வேட்பாளர்களும் தோல்வியை சந்தித்தனர். அதேசமயம், 2,20,401 பெண்கள் வாக்களித்துள்ளனர். 

இந்நிலையில், மிசோரம் தேசிய கட்சி ஆண் ஆதிக்க மனப்பான்மையுடன் இருப்பதால் பெண் வேட்பாளர்களை நிறுத்தவில்லை என அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஒரு இடம் கைப்பற்றிய பாஜக 6 பெண் வேட்பாளர்களை நிறுத்தியும் யாரும் வெற்றிபெறவில்லை. காங்கிரஸ் கட்சி ஒரு வேட்பாளரை நிறுத்தியிருந்தது. முன்னதாக 2014 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஒரு பெண் வேட்பாளரை நிறுத்தியதில், அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களையும் வீழ்த்தி வெற்றி பெற்றார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Assembly elections without women legislators Is this a state?


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->