அமெரிக்க வேலையைத் துறந்து, இந்தியாவில் தொண்டு செய்ய, ஐ.பி.எஸ். ஆன சாதனைப் பெண்மணி….! - Seithipunal
Seithipunal


 

இங்குள்ள இந்திய மாணவர்களுக்கு எல்லாம், அமெரிக்க வேலை தான் லட்சியக் கனவு. கை நிறைய சம்பளம், ஆடம்பர வாழ்க்கை, இதையெல்லாம் உதற யாருக்கு மனசு வரும்?

ஆனால், இல்மாவிற்கு வந்தது…!

உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் உள்ள குண்டார்க்கி என்ற குக்கிராமத்தில் பிறந்தவர் இல்மா அஃப்ரோஸ். இவரது 14-வது வயதில், இவரது தந்தை காலமானார். இருந்தாலும், இவரது தாயார், துவண்டு விடாமல், கடுமையாக உழைத்து இவரைப் படிக்க வைத்தார். இவரது தம்பியும், அக்காவின் திருமணத்திற்காக நகை சேர்க்காமல், அவரது படிப்பிற்குத் தான் பணம் கட்டினார்.

இவர்களது முயற்சியால், புதுடெல்லி, செயின்ட் ஸ்டீபன் கல்லுாரியில் பி.ஏ. தத்துவம் பயின்றார். பின், லண்டன் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் மேற்படிப்பு படித்தார். அதன் பிறகு, அமெரிக்காவில், மான்ஹன்டனில் வேலை கிடைத்தது.

இத்தனை நாள் பட்ட கஷ்டத்திற்கு, நல்ல பலன் கிடைத்தது, என்று மகிழ்ச்சியுடன் தான் அமெரிக்கா சென்றார்.

ஆனால், இடையே, விடுமுறைக்கு ஊருக்கு வந்த போது, ரேசன் கார்டுக்கு விண்ணப்பிக்க, வங்கிகளில் பாரம் எழுதித்தருவது போன்ற சாதாரண காரியங்களுக்கு கூட, மக்கள் மற்றவர்களை நாடும் காட்சி இல்மாவின் கண்களை உறுத்தியது.

என்ன தான் வெளி நாட்டில் வேலை பார்த்தாலும், தாயின் அரவணைப்பு, இந்தியர்களின் அக்கரை, அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் பாசம், இவற்றை இழக்க விரும்பாத இல்மா, தன் அமெரிக்க வேலையைத் துறந்து, இந்தியாவில்,  யு.பி.எஸ்.சி. தேர்வினை எழுதி, முதல் முயற்சியிலேயே ஐ.பி.எஸ். ஆகி உள்ளார்.

ஏழைகளின் கண்ணீரைத் துடைத்து, இந்தியாவிற்காக உழைப்பதை பெருமையாகக் கருதுகிறேன், என்று கூறி உள்ளார், இந்த சாதனைப் பெண்மணி…!

அவருக்கு ஒரு சல்யூட்….!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

an Indian lady winner in I.P.S.


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->