மனம் மாறியது பாஜக.. தூத்துக்குடி சம்பவத்திற்கு கடும் கண்டனம்.. அதிமுகவினரிடத்தில் நிலவும் பதற்றம்..? - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பாஜக தலைவர் அமித்ஷா கண்டனம் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் கடந்த மே 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 2 பெண்கள் உள்பட13 பேர் உயிரிழந்துள்ளனர்.

போராட்டத்தின் போது 102 பேர் காயமடைந்தனர். இவர்களில் துப்பாக்கி சூட்டில் காயமடைந்த 14 பேர் உள்பட 19 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

மேலும், தூத்துக்குடியில் நிலவி வரும் பதற்றமான சூழலில் இருந்து இயல்பு நிலைக்கு திரும்புவது தொடர்பாக வர்த்தகர்கள், கல்வி நிறுவனங்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

அவர்கள் கைது செய்யப் பட்டவர்களை விடுவிக்க வேண்டும், பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும், போலீசார் வீடு வீடாக ரோந்து செல்வதை நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்டபல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். வைத்துள்ளனர். அதுதொடர்பாக பரிசீலனை நடந்து வருகிறது.

இந்த நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பாஜக தலைவர் அமித்ஷா கண்டனம் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் மீது நேரடியாக துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார்.

அதிமுக தரப்பில் இருந்து பொதுமக்கள் மீதான தாக்குதலுக்கு ஆதரவே வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், முதல் முறையாக பாஜக தரப்பில் இருந்து தூத்துக்குடி சம்பவத்திற்கு கண்டனம் வந்திருப்பது அவர்களிடத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

amith sha warns tn govt


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->