மோடிக்கு எதிராக ஒன்றினையும் தென்மாநிலங்கள்-முதல்வர் அழைப்பால் பரபரப்பு .! - Seithipunal
Seithipunal


தென்மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையிலான அரசு குறைத்து வருகிறது. இதனை தென்மாநிலங்களான  தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள்  இந்த நிதி குறைப்பு முடிவை எதிர்க்க வேண்டும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார்.

Image result for siddaramaiah

இந்தியாவில் மாநிங்களுக்குகிடையேயான வரி வசூலிப்பை மத்திய நிதி ஆணையம் செய்து வருகிறது வருகிறது.இதற்கு முன் 1971-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படியே அனைத்து  மாநிலங்களுக்கும்  நிதிப் பங்கீடு இருந்து வருகிறது.இந்நிலையில் சென்ற நவம்பர் மாதம்  பிரதமர் தலைமையிலான மத்தியஅரசு என்.கே.சிங் தலைமையில் 15-வது மத்திய நிதி ஆணையத்தை ஏற்படுத்தியது.

Image result for 15th nithi kulu thalaivar

அந்த குழு இதுவரை நிதிப் பகிர்வில் பின்பற்றப்பட்ட 1971-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு மாற்றாக,இனிமேல்  2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படியே   நிதிப் பகிர்வு அளிக்கப்படும் என தங்கள் பரிந்துரைகள் அளித்தது . மேலும் இது  2020   ஏப்ரல் 1 முதல் 2025 மார்ச் 31 வரை ஐந்து  ஆண்டுகளுக்கு இது செல்லும் என அறிவித்தது.

இத்தகைய பரிந்துரைக்கு ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு,பாமக நிறுவனர் ராமதாஸ் , திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ஆகியோர்  எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Image result for ramadoss and stalin

இந்த சூழ்நிலையில்  கர்நாடக முதல்வர் சித்தராமையாவும்  தனது ட்விட்டரில் ,“மத்திய அரசு தனது 15-வது நிதி ஆணையதின் நிதிப் பகிர்வை 1971-க்கு பதில்  2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை எடுத்துக்கொள்ளுமாறு கூறியுள்ளது. இது தென்மாநிலங்களுக்கு ஏதிரானது. எனவே இதற்கு எதிராக நாம் போராட வேண்டும்” என புதுச்சேரி, தமிழகம், மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலங்கானா, கேரளா,  உள்ளிட்ட முதல்வர்களுக்கும்  அழைப்புவிடுத்துள்ளார். தற்போது காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி போன்ற  கட்சிகள் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக  நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர முயற்சித்து வருகின்றன.இந்நிலையில் தென்மாநிலதிற்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா அழைப்பு விடுத்திருப்பது தேசிய அரசியலில் பரபரப்பை உண்டாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

all south Indian CM s need to oppose central govt


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->