பாஜகவில் இணைந்த பிரபல நடிகர்  - Seithipunal
Seithipunal


இந்தி நடிகர் சன்னி தியோல் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார் அவர் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு போட்டியிடுகிறார் இந்தி நடிகர் சன்னி தியோல் வயது 62 இவர் தர்மேந்திரா மகன் ஆவார் ராஜஸ்தான் மாநிலம் தர்மேந்திரா அவர்கள் பிகானீர் தொகுதியிலிருந்து 2004ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார் இந்த நிலையில் கடந்த 19ம் தேதி புனேவில் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அமித்ஷாவை சன்னி தியோல் சந்தித்து பேசினார்  

அதை தொடர்ந்து  நடிகர் சன்னி தியோல் பாரதிய ஜனதா கட்சியில் சேர கூடும் என  ஊடகங்களில் எழுந்தன 

பாரதிய ஜனதாவில் சேர்ந்தார்  நடிகர் சன்னி தியோல் 
  டெல்லியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு சன்னி தியோல் நேற்று சென்றார் அங்கு அவரது கட்சியின் மூத்த தலைவர்களும் மத்திய மந்திரியுமான நிர்மலா சீதாராமன் பியூஷ் கோயல் ஆகியோர் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார் அவரை நிர்மலா சீதாராமன் வரவேற்றார் அப்போது சன்னி தியோல் எழுச்சிமிக்க பிரபலமானவர் பார்டர் போன்ற படங்களில் நேர்த்தியாக நடித்திருக்கிறார் மக்களின் நாடி அவர் புரிந்து கொள்வார் என குறிப்பிட்டார் 

 நடிகர் சன்னி தியோல் கூறும்போது எனது தந்தை தர்மேந்திரா மறைந்த தலைவர் வாஜ்பாய்க்கு பிடித்தமானவர் நான் பிரதமர் மோடிக்கு பிடித்த மாணவனாக இருப்பேன் என்று நம்புகிறேன் என குறிப்பிட்டார்  

நடிகர் சன்னி தியோல் பூர்வீகம் பஞ்சாப் மாநிலம் அங்கு பாரதிய ஜனதா கட்சி சிரோமணி ஆகா லீ தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து 3 நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறது அதில் ஒன்றை குருதாஸ்பூர் தொகுதியிலிருந்து சன்னி தியோல் போட்டியிடுவார் என பாரதிய ஜனதா கட்சி அறிவித்துள்ளது இந்த தொகுதியில் மறைந்த நடிகர் வினோத் கண்ணா 2014 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வென்றவர் அவர் பாரதிய ஜனதா கட்சியை சார்ந்தவர் 2017 மறைந்த பின்னர் நடந்த இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது மீண்டும் அத்தகுதியை கைப்பற்றவே  நடிகர் சன்னி தியோலை வைத்து அந்த தொகுதியை  பாரதிய ஜனதா கட்சி கைப்பற்ற  விரும்புகிறது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor joined in bjp


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->