அபிநந்தனின் இடமாற்றத்திற்கு பிறகு அவருக்கு இப்படியொரு அதிர்ஷ்டமா? - Seithipunal
Seithipunal



பாகிஸ்தானின் எஃப்-16 விமானத்தை வீழ்த்திய விங் கமாண்டர் அபிநந்தன், பாலகோட் மறுதாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு பாகிஸ்தான் ராணுவத்தினால் பிடிக்கப்பட்டு கெத்தாக நாடு திரும்பினார். இந்த சம்பவத்தை உலகமே பாராட்டியது. இந்தநிலையில், அபிநந்தன் மருத்துவ ஆலோசனைகளின் படி 4 வாரங்கள் நோய் விடுப்பு எடுத்துக் கொள்ள மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டார்.

மருத்துவர் அறிவுரையின் படி அபிநந்தனுக்கு 4 வார மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டது. இந்தநிலையில் அவர் சென்னையில் உள்ள அவரது குடும்பத்தை சந்திக்கவும் அனுமதிக்கப்பட்டது. ஆனால் தன் சக வீரர்கள் பணியாற்றும் படைக்கே மீண்டும் செல்ல அபிநந்தன் முடிவெடுத்துள்ளாதாக தகவல்கள் வெளியானது.

பின்னர் ஸ்ரீநகரில் முன்பு பணிபுரிந்த படைப்பிரிவில் கடந்த மாதம் பணியில் இணைந்தார். இந்நிலையில் ஸ்ரீநகரில் அவர் பணிபுரிந்த படைப்பிரிவில் இருந்து பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியானது. இந்நிலையில் அவருக்கு பாதுகாப்பு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதிய விமானப்படை அவரை மேற்கு மண்டலத்திற்கு பணியிடமாற்றம் செய்துள்ளது. 

இந்தநிலையில், போர் காலத்தில் வழங்கப்படும் வீர தீர செயல்களுக்கான வீர் சக்ரா விருதுக்கு, அபிநந்தனின் பெயரை பரிந்துரை செய்யவும் விமானப்படை முடிவு செய்துள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Abhinanthan Nominated for Award


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->