கேரளாவில்., 25 பேரால் 10 ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடுமை.! கொதித்தெழுந்த காவல்துறை.!!  - Seithipunal
Seithipunal


 

கேரளாவில் உள்ள கண்ணூர் மாவட்டத்தில் இருக்கும் பரசினி கடவு பகுதியை சார்ந்தவர் சிறுமி சவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது)., பள்ளியில் 10 ம் வகுப்பு பயின்று வரும் இவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாக., சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர் உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில்., கண்ணீருடன் வாக்குமூலத்தை கூறிய அந்த சிறுமி முகநூல் மூலம் அந்த பெண்ணுக்கு மற்றொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

முகநூல் மூலமாகவே பேசிவந்த இவர்கள்., பின்னர் சந்திப்பதற்கு முடிவு செய்து முகநூல் தோழி கூறிய முகவரிக்கு சென்றுள்ளார். அந்த முகவரிக்கு சென்றவுடன் விடுதியில் இருந்த பெண்ணின் பள்ளி சீருடையை மாற்றம் செய்துவிட்டு., விடுதியின் உள்ளேயே வைத்து பூட்டிவிட்டு சென்றுள்ளனர். 

சிறிது நேரத்தில் அந்த அறைக்கு வந்த 5 வாலிபர்கள் சிறுமியை கட்டாயப்படுத்தி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளனர். அந்த சிறுமியை அவர்களின் அலைபேசியில் ஆபாசமாக படம் எடுத்தும் வைத்துள்ளனர். 

அந்த ஆபாச படத்தை அவர்களின் நண்பர்களுக்கு பகிர்ந்து அதன் மூலம் மேலும் 20 நபர்கள் வலுக்கட்டாயமாக சிறுமியை பலவந்தப்படுத்தி கற்பழித்துள்ளனர். இந்த சம்பவத்தை அறிந்த சிறுமியின் சகோதரன் தட்டிகேட்கவே., சிறுமியின் சகோதரனை தாக்கிவிட்டு கொலை மிரட்டலும் விடுத்தது சென்றுள்ளனர். 

தனக்கு நடந்த அநீதிகளை கண்ணீருடன் கூறிய சிறுமியை கண்ட காவல் துறையினர்., உடனடியாக அவர்களின் மீது வழக்குப்பதிவு செய்து மாணவியின் வாழ்க்கையை சீரழித்த 5 பேரை அதிகாரியாக கைது செய்தனர். மேலும் 20 பேரின் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 8 வாலிபர்கள் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A STUDENT RAPPED BY 25 MEMBERS IN KERALA


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->