15 ஆயிரம் பேருக்கு இயற்கை பிரசவம் பார்த்த பாட்டி நரசம்மா இயற்கையை எய்தினார்.!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள தும்கூர் மாவட்டத்தில் இருக்கும் கிருஷ்ணாபுரம் பகுதியை சார்ந்தவர் நரசம்மா. தெலுங்கு மொழியை தாய்மொழியாக கொண்ட இவரது முன்னோர்கள் நாடோடி வம்சத்தை சார்ந்தவர் ஆவார். 

நாடோடி வம்சத்தை பொறுத்த வரையில் சிறுவயதில் திருமணம் முடித்து வைத்துவிடுவார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே., அந்த வகையில் 12 வயதில் திருமணம் முடிந்த நரசம்மாவிற்கு மொத்தம் 12 குழந்தைகள் பிறந்துள்ளன. இந்த குழந்தைகளில் 4 குழந்தைகள் சிறுவயதிலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். 

இவருடைய 20 வயதில் இவரது அத்தைக்கு இவரின் பாட்டி மருத்துவச்சியாக இருந்து பிரசவம் பார்க்கும் போது அவருடன் உடன் இருந்து தேவையான உதவிகளை செய்து வந்துள்ளார். அதன் படி தனது பாட்டியிடம் இருந்து அவர் பிரசவம் பார்க்கும் முறையை கற்றுத்தேர்ந்த பின்னர் அவராகவே பிரசவம் பார்க்க துவங்கியுள்ளார். 

கன்னட மொழியில் "சுலாகிட்டி" என்பதற்கு "வீட்டில் பிரசவம் பார்க்கும் மருத்துவச்சி" என்பது பொருளாகும். இவரை அங்குள்ள மக்கள் சுலாகிட்டி என்ற புனை பெயருடனேயே அழைத்து வந்துள்ளனர்.  

மேலும்., இவரை அறிந்த அங்குள்ள சுற்றுவட்டார கிராம மக்கள் பிரசவத்தின் போது இவரை அழைத்து சென்று பிரசவம் பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான நாட்டு வைத்தியங்களையும்., கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து நிறைந்த நாட்டு மருந்துகளையும் தயாரித்து வழங்கி வந்துள்ளார். 

இவரை பிரசவம் பார்க்க அழைத்து செல்லும் நபர்களிடம் பணம் எதும் வாங்காமல் பிரசவம் பார்த்து வந்துள்ளார்., தற்போது வரை சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இயற்கை வழியிலான பிரசவ முறையை வெற்றிகரமாக இவரின் வாழ்க்கை பயணத்தில் செய்த சேவையை பாராட்டி கடந்த 2012 ம் வருடத்தின் "இந்தியாவின் சிறந்த குடிமகள்"., "பத்மஸ்ரீ" விருதையும் இவர் பெற்றார். 

இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே உடல் நலக்குறைவால் அவதியுற்று வந்த இவர் இன்று பெங்களூரில் காலமானார். தற்போது இவருடைய வயது 98 என்பது குறிப்பிடதக்கது. மேலும்., இவருடைய மறைவிற்கு அங்குள்ள பல பொதுமக்களும்., பல முக்கிய பிரபலங்களும் இரங்கல் தெரிவித்தும் அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A NARASAMMA SULAKITTI GRAND MOTHER DIED


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->