ஆஸ்திரேலியாவில் சாதனை படைத்த 8 வயது இந்திய சிறுவன்! குவியும் வாழ்த்துக்கள்! - Seithipunal
Seithipunal


தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் வசித்து வருபவர் சமன்யு பொத்துராஜ். 8  வயது நிறைந்த இவர் ஆஸ்திரேலியாவின் மிக உயர்ந்த மலையான கோஸ்சியஸ்கோ மலையில் ஏறி சாதனை படைத்துள்ளான். தனது அம்மா லாவண்யா மற்றும் சகோதரி,பயிற்சியாளர் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழுவாக இவர்கள் சென்றுள்ளனர்.

மேலும் சமன்யு கடந்த ஏப்ரல் மாதம் ஆப்பிரிக்காவின் தான்சானியாவில் உள்ள கிளிமஞ்ஜாரோ மலையில் உள்ள உகுரு சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளான். கடல் மட்டத்தில் இருந்து 5,895 மீட்டர் உயரம் கொண்ட அந்தமலையில் அந்தசிறுவன்  இந்திய மூவர்ண கொடியை பறக்க விட்டான்.   

 இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய சமன்யு கூறுகையில், நான் இதுவரை 4 மலைகளில் ஏறியுள்ளேன். இதனையடுத்து நான் ஜப்பானில் உள்ள புஜி மலையில் ஏற உள்ளேன்.  மேலும் வருங்காலத்தில் வளர்ந்த பின்னர் நான் விமான படை அதிகாரியாக வர விரும்புகிறேன் என கூறியுள்ளான்.

மேலும் அவரது அம்மா லாவண்யா பேசுகையில், எங்கள் குழு ஒவ்வொரு முறை மலை ஏறும்பொழுதும் ஏதாவது ஒரு நோக்கத்தோடு செல்வோம்.இந்நிலையில்  இந்த முறை நாங்கள் கைத்தறி நெசவாளர்களுக்கு ஆதரவளிக்கும் திட்டத்துடன் மலை ஏறினோம் என கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

8 year indianchild climb in australia highest mountain


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->