சென்னை டூ பெங்களூர் உட்பட 10 நகரங்களில் அதிவேகத்துடன் பாயும் புல்லட் இரயில்.! வெளியான தகவல்.!! - Seithipunal
Seithipunal


சீனா மற்றும் ஜப்பான் நாடுகளில் அதிகளவில் புல்லட் இரயில்கள் என்று அழைக்கப்படும் அதிவேக மற்றும் துரித இரயில் சேவையானது செயல்பட்டு வருகிறது. இந்த இரயிலின் மூலமாக மக்கள் அதிக தூரங்கள் கொண்ட நகரங்களுக்கு மிக விரைவில் சென்றுவிட முடியும். 

இந்த திட்டத்தை போலவே., இந்தியாவிலும் அதிவேக இரயில் சேவையை கொண்டு வர மத்திய அரசானது விரும்பியதை அடுத்து., இதனை விரிவுபடுத்துவதற்கு மத்திய அரசு விருப்பம் தெரிவித்த நிலையில்., இதற்கான திட்டமிடுதலை இரயில்வே அமைச்சகமானது கையாண்டு வருகிறது. 

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் இருந்து கொல்கத்தா., வாரணாசி., போபால்., அமிர்தசரஸ்., அகமதாபாத் வழித்தடங்களில் சுமார் 6 புல்லட் இரயில்களையும்., நாக்பூரில் இருந்து மும்பை வரையிலும்., பாட்னாவில் இருந்து கொல்கத்தா வரையிலும் இந்த இரயில் சேவையை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இதற்கு முன்னதாகவே சென்னையில் இருந்து பெங்களூர் மற்றும் மைசூர் வரையில் புல்லட் இரயில்கள் விடுவதற்கு இரயில்வே நிர்வாகம் ஏற்கனவே திட்டமிட்டு இருந்தது. இந்தியா முழுவதும் சுமார் 10 வழித்தடங்களில் புல்லட் இரயில்களை செயல்படுத்த ரூ.10 இலட்சம் கோடி முதலீடு செய்யப்படவுள்ளது. 

இந்த திட்டங்கள் அனைத்தும் நிறைவு செய்வதற்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு இரயில்வே நிர்வாகம் அனுப்பி வைத்துள்ள நிலையில்.,2025 ம் வருடத்திற்குள் இந்த திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும்., மும்பையில் இருந்து அகமதாபாத்திற்கு இடையேயான புல்லட் இரயில் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டு பணிகள் அனைத்தும் தொடங்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

7 city and including Chennai to Bangalore bullet train work starting soon


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->