62% பெண்கள் மாதவிடாய் காலத்தில் என்ன செய்கிறார்கள் தெரியுமா..? இதுக்கு பெயர் தான் டிஜிட்டல் இந்தியாவாம்..!! - Seithipunal
Seithipunal


இன்றைய இளைய தலைமுறையிடம், மாதவிடாய் பற்றிய பெரிய விவாதமே நடந்துவருகிறது.

மாதவிடாய் என்பது `அசுத்தம்’ என்று கூறப்பட்ட பழைய கருத்துகளை ஒதுக்கி, அது ஓர் உடல்நிலை மாற்றம் என்பதை  அனைவரும் உணரத் தொடங்கியிருக்கிறார்கள்.

ஆனால் பலராலும் கண்டுகொள்ளப்படாத மாதவிடாய்ச் சுழற்சியின் மறுபக்கமே, ஒழுங்கற்ற மாதவிடாய். இது இன்றைக்கு பல பெண்கள் சந்தித்து வரும் முக்கியமான பிரச்னை.

 28 நாட்ளின் முடிவில், மாதவிடாய் ஏற்படும். ஆனால், எல்லோரின் உடலும் இந்த நாள் கணக்கோடு ஒத்துப்போவதில்லை.

21 முதல் 35 நாட்களுக்குள் மாதவிடாய் சுழற்சி ஏற்பட்டுவிட வேண்டும். அதற்கு முன்னோ, பின்னோ இருப்பது பிரச்னைக்குரிய விஷயம்.

படிக்கவும், பணிகளுக்கு செல்லும் பெண்களுக்கு வரப்பிரசாதமாக இருப்பது நாப்கீன்கள். இவை தான் தேவையில்லாத சங்கடங்களில் இருந்து தவிர்க்கிறது.

இந்த நிலையில், இந்தியாவில் 62 சதவீதம் இளம் பெண்கள் தங்களது மாதவிடாய் காலங்களில் நாப்கின்களுக்கு பதிலாக துணிகளையே பயன்படுத்தி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தேசிய குடும்ப சுகாதார ஆய்வு அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் கிடைத்துள்ளது.

இதில் அதிகபட்சமாக பீகார் மாநிலத்தில் 82 சதவீதம் பெண்கள் துணிகளை பயன்படுத்துகின்றனர். அதற்கடுத்த நிலையில், சட்டீஸ்கர் மற்றும் உத்தரபிரதேசம் மாநிலங்களில் 81 சதவீதம் பெண்கள் நாப்கின்களை பயன்படுத்துவதில்லை.

மிஸோரம் மாநிலத்தில் அதிகபட்சமாக 93 சதவீதம் பெண்கள் நாப்கின்களை பயன்படுத்து வருகின்றனர். தமிழ்நாட்டில் 91 சதவீதம் பெண்கள் நாப்கின்களை பயன்படுத்துவதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உள்ளூர்களில் தயாரிக்கப்படும் நாப்கின்களை 16 சதவீதம் பெண்கள் பயன்படுத்துவதாகவும் அதனால் சில நேரங்களில் சுகாதார கேடு ஏற்படுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

62 percent of womens not aware of napkins


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->