ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர் - 5 வெளிநாட்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை! - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் நடந்த என்கவுண்டரில் 5 வெளிநாட்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டம் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகிலுள்ள ஜுமாகுண்ட் பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு இன்று அதிகாலை ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து பாதுகாப்பு படையினர், காஷ்மீர் போலீசாருடன் இணைந்து அப்பகுதியில் அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்பொழுது மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு பாடினர் நோக்கி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதைத்தொடர்ந்து பாதுகாப்பு படையினர் பதிலடி தாக்குதல் நடத்தினர். இந்நிலையில் இருதரப்பினருக்கும் இடையே நடைபெற்ற என்கவுண்டரில் 5 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றுள்ளனர்.

மேலும் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் வெளிநாட்டைச் சேர்ந்த பயங்கரவாதிகள் என்றும், தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் பணி நடந்து வருகிறது என்றும் காஷ்மீர் ஏடிஜிபி விஜய் குமார் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பாக கடந்து ஜூன் 13 அன்று, குப்வாராவில் உள்ள கட்டுப்பாட்டு எல்லைக்கு அருகே இரண்டு பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 foreign terrorists killed in encounter in Kupwara Jammu Kashmir


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->