நோட்டா ஓட்டுக்களால் வெற்றியை பறிகொடுத்த 4 பாஜக அமைச்சர்கள்! எந்த மாநிலம்? - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஷ்கர், மிசோரம் மற்றும் தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இந்த தேர்தல் முடிவுகளில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கிறது. மிசோரத்தில் மிசோரம் தேசிய கட்சி ஆட்சி அமைக்கிறது. தெலுங்கானாவில் டிஆர்எஸ் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. இந்த தேர்தலில் பாஜக அனைத்து மாநிலங்களிலும் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது.

இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் மொத்தமுள்ள 230 தொகுதிகளில் காங்கிரஸ் 114  இடங்களில் வெற்றி பெற்றதாகவும், பாஜக 109 இடங்களில் வெற்றி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது. பகுஜன் சமாஜ் 2 தொகுதிகளிலும், சமாஜ்வாதி கட்சி 1 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. மேலும் சுயேச்சை வேட்பாளர்கள் 4 பேர் வெற்றி பெற்றனர்.

இதனிடையே, இந்த மாநிலத்தில் ஆட்சியமைக்க 116 இடங்கள் தேவை என்பதால், பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சியினர் காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்ததால் காங்கிரஸ் ஆட்சியமைக்கிறது.

இந்த மாநிலத்தில், 4 பாஜக அமைச்சர்கள் நோட்டா ஓட்டுக்களால் தோல்வியை சந்தித்துள்ளனர். அந்த அமைச்சர்கள் மிக குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்துள்ளனர். அந்த வகையில், குவாலியர் தெற்கு தொகுதியில் போட்டியிட்ட உள்துறை இணை மந்திரி நாராயணன்சிங் குஷ்வா 121 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்றுள்ளார், நோட்டா ஓட்டுகள் 1550.

தமோ தொகுதியில் நிதி மந்திரி ஜெயந்த் மல்லையா 799 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார். நோட்டா ஓட்டுகள்  1,299 பெற்றுள்ளது. ஜபல்பூர் வடக்கு தொகுதியில் சுகாதாரதுறை இணை மந்திரி சரத் ஜெயின் 578 ஓட்டுகள் வித்தியாசத்திலும் (நோட்டா 1,209), புர்கான்பூர் தொகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி 5,120 ஓட்டுகள் வித்தியாசத்தில் (நோட்டா 5,700)  தோல்வியை  சந்தித்துள்ளனர்.  

மத்திய பிரதேச மாநிலத்தில் நோட்டாவுக்கு மொத்தம் 5.4 லட்சம் ஓட்டுகள் கிடைத்தது. இது 1.4 சதவீதம் ஆகும். இதன் மூலம் அந்த மாநிலத்தில் 5-வது இடம் கிடைத்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4 BJP ministers who have succeeded in the win Which state?


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->