மூடி மறைத்த மத்திய அரசு! ஈராக்கில் பிணைக்கைதிகள் எப்போ இறந்தார்கள் தெரியுமா?! தப்பித்தவர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! - Seithipunal
Seithipunal


கடந்த 2014-ம் ஆண்டு  ஈராக்கில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் கொல்லப்பட்டதாக மத்திய அமைச்சர்  சுஷ்மா ஸ்வராஜ் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இந்நிலையில், 39 பேரும் கொல்லப்பட்டதாக கடந்த மூன்றாண்டுகளாக கூறி வருகிறேன், என அங்கிருந்து உயிர்தப்பிய ஹர்ஜித் மாசிஹ் என்பவர் பேட்டியளித்துள்ளார்.

2014-ம் ஆண்டு ஈராக்கில் நாங்கள் 40 இந்தியர்கள் ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தோம், அங்கு துப்பாக்கிகளுடன்  தீவிரவாதிகள் நுழைந்து சுட்டனர். அப்போது அனைவரும் அங்கேயே இறந்துவிட்டனர் என்றும், அவர் மட்டும் மயக்க நிலையில் கிடந்தது பின் வங்கதேச தூதரகம் உதவியுடன் இந்தியா திரும்பியதாகவும் தெரிவித்தார். 39 பேரும் கடத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அவர்களின் குடும்பத்தினரிடம் கூறி ஏமாற்றி வருகிறது  என்றும் கூறினார். 

ஆகினும் இதனை அமைச்சர் சுஷ்மா மறுத்துள்ளார், அயல்நாட்டில் நடந்த சம்பவங்களை நாடாளுமன்றத்தில் தெரிவிப்பது தான் முறை, 2014 முதல் 2017 வரை  ஈராக்கில் அவர்கள் உயிருடன் இருந்ததற்கோ, கொல்லப்பட்டதற்கோ எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை” என தெரிவித்தார்.

காங்கரஸ் தரப்பில் இந்தியர்கள் எப்போது கொல்லப்பட்டார்கள் என அரசு தெளிவுபடுத்த வேண்டும் என சசி தரூர் எம்பி கோரிக்கை வைத்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

39 indians died in iraq this incident on 2014


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->