இந்தியாவில் 35.5 கோடி பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகும் ஆபத்து : சர்வதேச தொண்டு நிறுவனம் எச்சரிக்கை..!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் 35.5 கோடி பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகும் ஆபத்து இருப்பதாகவ சர்வதேச தொண்டு நிறுவனம் எச்சரித்துள்ளது.

சர்வதேச தொண்டு நிறுவனமான வாட்டர்எய்டு சாரிட்டி, உலகம் முழுவதும் சுகாதாரம், பாதுகாக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்டவற்றை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிறுவனம், உலகம் முழுவதும் மக்களுக்கு கிடைத்துள்ள அடிப்படை சுகாதாரம் குறித்து அவுட் ஆஃப் ஆர்டர் என்ற பெயரில் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. அதில், 2017-ம் ஆண்டுக்கான அடிப்படை சுகாதாரம் இல்லாமல் வசிக்கும் மக்களை கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

பிரதமர் மோடி கொண்டு வந்த தூய்மை இந்தியா திட்டத்தில் மூலம் பல்வேறு இடங்களில் கழிப்பறைகள் கட்டும் பணிகள், சுகாதாரத்தை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. 

இருந்தாலும், இந்தியாவில், 73.2 கோடி மக்கள் கழிப்பறைகள் இல்லாமல் வசிப்பதாக அந்த ஆய்வு தெரிவித்துள்ளது. அவர்களில் 35.5 கோடி பேர் பெண்கள், சிறுமிகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அவர்கள் அனைவரும் பொதுவெளியையே பயன்படுத்துவதால், பூச்சிகள், விலங்குகள் போன்றவற்றால் உயிருக்கு ஆபத்து இருப்பதாவும், பாலியல் வன்முறைக்கு ஆளாகும் ஆபத்து அதிகமாக இருப்பதாக தெரிவித்துள்ளது.

அந்த பட்டியிலில், இரண்டாம் இடத்தில் சீனாவும், மூன்றாவது இடத்தில் ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவும் இடம்பிடித்துள்ளது. அடுத்தடுத்த இடங்களில் எத்தியோப்பியா, வங்கதேசம், இந்தோனேசியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் உள்ளன.

உலகளவில் 3 பேரில் ஒருவருக்கு கழிவறை இல்லை என்றும் அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3.55 million women will face sexual problem


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->