ஆபத்தான ரசாயனங்களுடன், கிங்ஃபிஷர் பீர்கள்? குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி.?!  - Seithipunal
Seithipunal


கிங்பிஷர் பீர்கள் ஆபத்தான ரசாயனங்கள் கலந்து விற்கப்படுவதாக கூறப்பட்ட நிலையில், இந்த வழக்கின் அடிப்படையில் கலால் துறையினர் ரூ.25 கோடி மதிப்பிலான பீர்களை பறிமுதல் செய்து இருக்கின்றனர்.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த மதுபான பாட்டில்கள் விற்கப்பட்டு வருகிறது. இவற்றை குடிமகன்கள் விருப்பப்பட்டு வாங்கி குடிக்கின்றனர். அதிகப்படியான குடிமகன்களின் பிரியமாக இருப்பது கிங்ஃபிஷர் பீர் தான். 

இந்த கம்பெனி பீர்களுக்கு மக்கள் மத்தியில் ஒரு ஸ்பெஷல் பெயர் உண்டு. கர்நாடக மாநிலத்தில் உள்ள நஞ்சன்கூடு பகுதியில் கிங்பிஷர் நிறுவனம் தனது மதுபானங்களை தயாரித்து வந்தது. இந்த நிலையில், அங்கு தயாரித்து விற்கப்பட்டு வந்த கிங்பிஷர் ஸ்ட்ராங் மற்றும் கிங்பிஷர் அட்ரா வகை பீர்கள் ஆபத்தான ரசாயனங்கள் கலந்து விற்கப்படுவதாக கூறப்படுகிறது. 

இவ்வாறு இரசாயனங்கள் கலந்திருப்பதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டு இருப்பதாக ஒரு தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து, கிங்பிச்சர் நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடிப்படையில் கலால் துறையினர் ரூ.25 கோடி மதிப்பிலான பீர்களை பறிமுதல் செய்து இருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

25 crores Kingfisher beers seized


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->