அடுத்தடுத்தாக 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு ! சோகத்தில் மூழ்கிய குடிமகன்களின் குடும்பத்திற்காக, அரசியல் பிரபலம் விடுத்த அதிரடி கோரிக்கை.! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேசம் மாநிம்,சகாரன்பூர் மற்றும் குஷிநகர் மாவட்டங்களிலும், உத்தரகாண்டின் ரூர்க்கி மாவட்டத்திலும் சட்டவிரோதமாக கள்ளச்சாராய விற்பனை நடந்து வருகிறது.  

இவ்வாறு கடந்த 8-ம் தேதி நள்ளிரவும் இம்மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை நடைபெற்றுள்ளது. அதனை 100 க்கும் மேற்பட்ட பேர் வாங்கிக் குடித்துள்ளனர். இந்நிலையில் அதை குடித்தது முதலே பலருக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது.

இதில் குடித்த சிறிது நேரத்திலேயே 12 பேர் பலியானதாக தகவல் வெளிவந்த நிலையில் அதனை தொடர்ந்து பலரும் அடுக்கடுக்காக ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்நிலையில் தற்போது கள்ளச்சாராயம் குடித்தவர்கள்  பலி எண்ணிக்கை 116 ஆக உயர்ந்துள்ளது.

 இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்ய , 5 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை உத்தரபிரதேச அரசு அமைத்துள்ளது. இந்த குழு விரைவில் தனது விசாரணையை தொடங்கவுள்ளது.

இந்நிலையில் இதற்கு பாஜக அரசுதான் காரணம் என காங்கிரஸ் பொதுச்செயலாளரும், உத்தரபிரதேசத்தின் கிழக்கு பிராந்திய பொறுப்பாளருமான பிரியங்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில்: 

உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் சட்டவிரோதமான மதுவிற்பனை அதிகளவில் நடைபெற்று வருகிறது . இத்தகைய விஷ சாராயத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு அந்தந்த மாநில பா.ஜனதா அரசுகளே காரணம். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு போதுமான நிவாரணம் வழங்குவதுடன், பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

116 drinkers dead in drinking block liquor drinks


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->