குழந்தைகள் விரல் சூப்புவதற்கான காரணத்தை அறிவீர்களா நீங்கள்?.!! - Seithipunal
Seithipunal


சிறுவயதில் இருக்கும் குழந்தைகள் பெரும்பாலும் அவர்களின் விரலை சூப்பிக்கொண்டே இருப்பது வழக்கம். இந்த பழக்கத்தை முதலிலேயே கவனித்து அதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்காமல் இருக்கும் பட்சத்தில் பெரும் பின் விளைவை சந்திக்க நேரிடும். 

குழந்தைகள் தாயின் வயிற்றில் இருக்கும் சமயத்தில் தொடரும் இந்த பழக்கமானது., தனிமையை உணரும் பட்சத்தில் மீண்டும் குழந்தைகள் தங்களின் விரலை சூப்ப துவங்குகின்றனர். பொதுவாகவே இந்த விரல் சூப்பும் பழக்கம் குழந்தைகளுக்கு இரண்டு வயதுவரை இருக்கலாம். மேலும்., பெரும்பாலான குழந்தைகளுக்கு 7 வயது வரையிலும் விரல் சூப்பும் பழக்கமானது பின் தொடரும். 

இந்த விரல் சூப்பும் பழக்கமானது தாய்ப்பால் பருகி வளரும் குழந்தைகளை காட்டிலும்., புட்டிப்பால் எனப்படும் பீடிங் பாட்டிலில் பால் குடித்து வளரும் குழந்தைகளே அதிகளவு விரல் சூப்பும் பழக்கத்தை வைத்துள்ளனர். குழந்தைக்கு பால் ஊட்டும் பெண்கள் குழந்தை பால் குடிக்கும் வரை காத்திருந்து பின்னர் குழந்தைகள் உறங்கியவுடன் தன் மார்பில் இருந்து குழந்தையை எடுக்கிறார். இதன் மூலமாக குழந்தைகளுக்கு நல்ல அரவணைப்பு கிடைப்பதால்., விரல் சூப்புவதற்கு நினைப்பதில்லை. 

பீடிங் பாட்டிலில் பால் குடிக்கும் குழந்தைகள்., பாலை குடித்தவுடன் அதனை தாயார் வாங்கிவிடுகிறார். இதன் காரணமாக குழந்தைகளுக்கு சூப்பும் நினைவானது எளிதில் நிறைவடைவதில்லை. இதனை அடுத்து குழந்தைகள் அவர்களின் ஏமாற்றத்தை நிறைவு செய்வதற்காக தங்களின் விரலை குழந்தைகள் சூப்புகின்றனர். 

தூக்கம் வரும் சமயத்தில் குழந்தைகள் தங்களின் தாயாரின் அரவணைப்பையும் தாலாட்டையும் எதிர்பார்க்கின்றனர். இதனை செய்யாத பட்சத்தில் குழந்தைகள் தங்களின் தனிமை போக்குவதற்க்காகவும்., சோர்வாக இருக்கும் சமயத்திலும் அந்த பிரச்சனையில் இருந்து விடுபடுவதற்காக தங்களின் விரலை சூப்பி வருகின்றனர். 

குழந்தைகளின் வளரும் பருவத்தில் அவர்களின் பெற்றோரின் பாசத்தை எதிர்பார்த்தும்., பேச்சு துணைக்கு ஒரு ஆளையும் எதிர்பார்த்து இருக்கின்றனர். இதனாலே பிற குழந்தைகளுடன் விளையாடுதவதற்கு அதிகளவு ஆவல் தெறிப்பார்கள். தன்னை சுற்றி நடக்கும் அனைத்தையும் கவனித்து தங்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்துவார்கள். இந்த எண்ணங்கள் நிறைவேறாத பட்சத்தில்., விரல் சூப்பும் பழக்கத்தை கடைபிடிக்கின்றனர். 

பசி எடுக்கும் சமயத்திலும்., பற்கள் முளைக்கும் நேரத்தில் ஏற்படும் உறுத்தல் போன்ற காரணத்தால் விரல் சூப்பும் பழக்கத்திற்கு அடிமையாகி சிறிது காலத்திற்கு பின்னர் விரல் சூப்பும் பழக்கத்தை கைவிடுகின்றனர். இதில் இருந்து தப்பிக்கும் பிற குழந்தைகள் விரல் சூப்பும் பழக்கத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். . 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

You know the reason for children's fingertips


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->