உலகமே அஞ்சும் பிரச்சனை.! அரசியலா? பயங்கரவாதமா? பணமா?.!! மூன்றும் இல்லை., இதற்குத்தான் உலகமே அஞ்சுகிறது.!! - Seithipunal
Seithipunal


நாள்தோறும் பல விதமான சூழ்நிலைகள் காரணமாக நமது உடல் நலத்தை வேலைக்கு செல்லும் பெரும்பாலானோரும்., பயில செல்லும் மாணவ - மாணவியர்களுடம் சரி வர கவனிக்காமல்., தேவையான உணவுகளை உட்கொள்ளாமல்., உடலுக்கு சத்தான பழவகைகள் மற்றும் காய்கறிகளை எடுத்து கொள்ளாமல் உடல் நலத்தை மேம்படுத்தாமல் இருக்கின்றனர். 

இதனால் ஏற்படும் பல விதமான பதிப்புகளை அறிந்தாலும் சூழ்நிலைகளின் காரணமாக அவர்களின் உடல் நலத்தை மேம்படுத்தவர்க்கு எந்த விதமான வாய்ப்புகளும் கிடைக்காமல் இருக்கிறது. மேலும்., சரியான உணவு முறைகளையும்., தூக்கமின்மையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் இந்த பதிவில் காண்போம். 

நீண்ட நேரம் தூக்கமில்லாமல் கண்விழித்து நமது உடல் நலத்தை வருத்திக்கொண்டு இருந்து வந்தால் நமது உடலில் இருக்கும் சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்படும். தூக்கமின்மை பிரச்சனையிலும் நமது சிறுநீரகம் பாதிப்பிற்குள்ளாகவும் வாய்ப்புள்ளது. 

பெரும்பாலும் இல்லங்களில் இருக்கும் குளிர்சாதன பெட்டிகளில் காலை தயாரித்த உணவுகளை வைத்து பின்னர் மதிய நேரத்திலோ அல்லது மாலை வேலைகளிலோ சாப்பிட்டு வந்தால் வயிறு சம்பந்தமான கோளாறுகள் ஏற்படும். 

அதிகளவு கொழுப்பு சத்துக்கள் நிறைந்த உணவு வகைகள் மற்றும் அளவுக்கு அதிகமாக மது பானங்களை தொடர்ந்து அல்லது தினந்தோறும் அருந்தும் வழக்கத்தை வைத்திருந்தால் கல்லீரல் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நமது உடல் நலனானது பாதிப்பிற்கு உள்ளாகும். 

தினமும் சாப்பிடும் நமது உணவு பொருட்களில் அதிகளவில் உப்பு சேர்த்தோ அல்லது உப்பு அதிகளவில் இருக்கும் உணவு வகைகளை சாப்பிட்டு வந்தால் இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படும். 

அதிகமான அளவில் நொறுக்குத்தீனி உணவுகளை அதிகளவு சாப்பிட்டு வந்தால் கணையம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். கடலசார்ந்த உணவு பொருட்களை அதிகளவு சாப்பிட்டு வந்தால் குடல் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும். 

தொலைக்காட்சி., தொடுதிரை அலைபேசி மற்றும் கணினிகளை அதிக நேரம் தொடர்ச்சியாக உபயோகம் செய்து வந்தால் கண்கள் தொடர்பான பிரச்சனை ஏற்படும். மேலும்., அதிகளவு காலை உணவுகளை தவித்து வரும் பட்சத்தில் பித்தப்பை பிரச்சனையானது ஏற்படும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

why the world panic for this problems


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->