கண்ணா அங்க பாருடா நிலா தெரியுது., ஒரு ஆ வாங்கிக்கடா.!! குழந்தைக்கு நிலவை காட்டி சோறு ஊட்டுவதன் ரகசியம் அறிவீர்களா நீங்கள்?.!!  - Seithipunal
Seithipunal


நாம் சிறு குழந்தைகளாக இருக்கும் சமயங்களில் நமது பெற்றோர்கள் சாதம் ஊட்டும் போது அவர்களின் இடுப்பில் அமரவைத்து அங்க பாரு கண்ணா நிலா தெரியுது... ஒரே ஒரு ஆ வாங்கிக்கோடா என் செல்லம்... என்று கூறுவார்கள். அவர்கள் கூறுவதையும்., அந்த நேரத்தில் கூறும் கதையையும் கேட்டு நாம் சாப்பிட்டு வந்தோம். 

அவ்வாறு நிலவை காட்டி சோறு ஊட்டுவதில் அறிவியல் உள்ளது என்று இன்றுள்ள ஆராய்ச்சியாளர்களால் பல ஆராய்ச்சிகளுக்கு பின்னர் கண்டறிந்துள்ளனர். அன்றே தமிழன் தனது திறமையால் இதற்கு பின்னால் ஒளிந்திருக்கும் இரகசியத்தை அறிந்து குழந்தைகளுக்கு நிலவை காட்டி சோறு ஊட்ட சொல்லிக்கொடுத்து விட்டான். 

குழந்தைகள் அவர்களின் தாயார் வயிற்றில் இருக்கும் சமயத்தில் தாயின் தொப்புள் கொடி மூலமாக குழந்தைகளுக்கு தேவையான உணவு வழங்கப்படுகிறது. குழந்தையின் பிறப்பிற்கு பின்னர் தொப்புள் கொடியானது பிரித்தெடுக்கப்பட்டு., குழந்தைகளுக்கு உணவு குழாயில் அளவானது விரிவடைய துவங்கும். 

இந்த உணவு குழாயின் அளவானது முழுமையாக விரிவடைவதற்கு ஐந்தாண்டு காலங்கள் எடுத்து கொள்கிறது. குழந்தைகளுக்கு நிலவை காட்டி சோறு ஊட்டும் சமயத்தில் அவர்கள் மேல் நோக்கி பார்ப்பதால்., அவர்களின் தொண்டை மற்றும் உணவுக்குழல் பாதையானது விரிவடைந்து., ஊட்டப்படும் சாதமானது எந்த விதமான சிக்கலும் இன்றி இரைப்பையை நோக்கி பயணிக்கிறது. 

இதன் மூலமாக தொண்டை குழலின் அசைவு., செரிமான மண்டலத்திற்கு பயிற்சி கிடைப்பதால் மூலமாக குழந்தைகளின் உணவு சரியாக செரிமான மண்டலத்திற்கு சென்று செரித்து குழந்தைகளின் உடல் நலமானது பாதுகாக்கப்படுகிறது. இதனாலேயே தமிழன் குழந்தைக்கு நிலாவை காட்டி சோறு ஊட்டும் பழக்கத்தை அந்நாளில் இருந்து கடைபிடித்து., கற்பித்து கொடுத்து வந்துள்ளான். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

why small baby mothers feeding food for children seeing to moon


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->