தேள், பாம்பு போன்ற விஷ பூச்சுகள் கடித்தால் விஷம் ஏறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்!! - Seithipunal
Seithipunal



கிராமப்புறங்களில், அதிகஇடங்களில் விஷப் பூச்சிகள் அதிகமாக காணப்படும். மழை காலத்தில் நகர் புறங்களில் கூட விஷப் பூச்சிகள் அதிகம் தென்படும். 

குறிப்பாக பாம்பு, தேள் போன்ற விஷம் வீரியமாக உள்ள உயிரினம் நம்மை கடித்தால், உடனே உடம்பில் விஷம் ஏறி நமது உடலை பலவீனப்படுத்தும்.  

விஷ பூச்சு கடித்தால் என்ன செய்வது என்று பற்றி விளக்கமாக இங்கு தெரிந்துகொள்ளலாம்.  இந்நிலையில் பாம்பு கடித்ததை எப்படி கண்டறிவது?

நம் கண்ணெதிரே நம்மை பாம்பு கடித்தால், பாம்புதான் நம்மை கடித்தது என்று நமக்கு தெரியும். இதுவே நாம் உறங்கி கொண்டிருக்கும் வேளையில் அல்லது வயல் காட்டில் நடந்துக் கொண்டிருக்கும் போது நமக்கே தெரியாமல் பாம்பு கடித்துவிட்டால் அது எந்த வகையிலான பாம்பு என்பதையும்  எப்படி கண்டறிய முடியும்.  கீழே குறிப்பிட்டுள்ள சில வழிமுறையின் மூலம் எளிதாக கண்டறியலாம். 

                

ஆடு தின்னாப்பாளை என்ற செடியுடைய வேரினை பாம்பு கடித்தவர்களுக்கு கொடுத்து சுவைக்க சொன்னால் என்ன வகையான பாம்பு கடித்தது என்று எளிதாக தெரிந்துகொள்ளலாம். நீங்கள் இதை உண்ணும் போது என்ன சுவை வருகிறதோ அதை பொறுத்து, உங்களை கடித்தது எந்த வகையான பாம்பு என்று மதிப்பிடலாம்.  

  • இனிப்பு சுவையாக இருந்தால் - நல்ல பாம்பு 
  • புளிப்புச் சுவையாக இருந்தால்- விரியன் பாம்பு 
  • வாய் வழவழப்பாக இருந்தால்- வழலைப்பாம்பு, நீர் பிரட்டை 
  • கசப்புச் சுவையாக இருந்தால்- வேறு பூச்சிகள். 

இதையடுத்து நாம் என்ன செய்ய வேண்டும்?

ஒரு நபரை பாம்பு கடித்துவிட்டால், உடனே பாதிக்கப்பட்ட அந்த நபரை வாழைப்பட்டையில் படுக்க வைக்க வேண்டும். பிறகு வாழைப்பட்டை சாற்றை 1 லிட்டர் அளவு பிழிந்து வாயில் ஊற்ற வேண்டும்.  1 லிட்டர் வாழைபட்டை சாற்றையும், பாம்பு கடித்த நபரை குடிக்க செய்ய வேண்டும். இது முதலுதவி தான். அதன் பின் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு, பாதிக்கப்பட்டவரை கூட்டி சென்று சிகிச்சை அளிக்க வேண்டும்.  

இதை அடுத்து தேள் கடித்தால் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி தெரிந்துகொள்ளாம். தேள் கடித்தால் என்ன செய்வது? 

பாதிக்கப்பட்டவருக்கு, எலுமிச்சை பழத்தின் விதைகளை உப்புடன் சேர்த்து அரைத்து கொடுத்தால், தேள் கடித்த விஷம் இறங்கி விடும். அதே போல், எலுமிச்சை பழத்தின் சாறுடன் உப்பு சேர்த்து கலந்து தேள் கடித்த இடத்தில் தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.

ஒரு கல்லில்  மீது சில துளி நீர் தெளித்து அதில் புளியங்கொட்டையை சிறிது நேரம் தேய்த்து அதன் சூட்டுடன் தேள் கடித்த இடத்தில் வைக்க வேண்டும்,  அப்போது, அதன் விஷயம் இறங்கியதும் புளியங்கொட்டை கீழே தானாக விழுந்துவிடும்.  

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

What should be done to avoid poisoning the poisonous snake


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->