மாரடைப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணங்கள்!. அதை தடுப்பது எவ்வாறு? - Seithipunal
Seithipunal



உடலுக்கு தேவையான சக்தியைத் தொடர்ச்சியாக வழங்கிவரும் இதயத்தின் சீரான இயக்கத்திற்குத் துணை புரிவது இதயத் தசைகள்தான். இந்தத் தசைகளுக்கு சக்தியை வழங்க இரத்தக்குழாய்கள் இருக்கின்றன. அந்த இரத்தக் குழாயில் அடைப்புகள் ஏற்பட்டு, இதயத் தசைகளுக்கான இரத்த ஓட்டம் தடைப்பட்டு ஏற்படுவதுதான் மாரடைப்பு.

ஒரு முறை பழுதாகி மாரடைப்பு ஏற்பட்டுவிட்டாலே, அங்கு நிரந்தரமாகப் பிரச்சினைகள் குடியேறிவிடும். அந்தத் தசைகளை மீண்டும் சீரமைக்க முடியாது. ஆகையால், மாரடைப்பு நோய் வருமுன் காத்துக்கொள்வதே சிறந்தது.

மாரடைப்பு வருவதற்கு முக்கிய காரணங்கள்:

1. புகையிலை பழக்கம்.
2. இரத்த அழுத்தம்
3. நீரிழிவு நோய்
4. கொழுப்பின் அளவு
5. தொப்பை மற்றும் உடல் பருமன்
6. மன உளைச்சல்


சிகரெட்டில் நிக்கோட்டின் உட்பட பல நச்சுப் பொருட்கள் இருக்கின்றன. இந்த நிக்கோட்டின், இருதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டுசெல்லும் இரத்தக் குழாயைச் சுருக்கிவிடுகிறது.

இதனால்தான் புகை பிடிப்பவர்களுக்கு மாரடைப்புக்கான வாய்ப்புகள் மிக அதிகம். அதுமட்டுமல்ல. புகைபிடிப்பதால், மேலே கூறப்பட்ட மற்ற காரணங்களும் வந்துவிடும்.

இரத்த அழுத்தம் ஒரு மௌன உயிர் கொல்லி. ஏனெனில், இது உடலில் இருக்கிறது என்பதை எவராலும் எளிதில் அறிந்துகொள்ள முடியாது. அதற்கான அறிகுறியும் இருக்காது.

ஆனால் இது விஸ்வரூபம் எடுக் கும்போது, உடனடியாக உடலின் ஐந்து முக்கிய உறுப்புகளான மூளை, கண்கள், இருதயம், சிறுநீரகம் மற்றும் இரத்தக் குழாய்கள் போன்றவற்றை பாதிக்கும். எனவே சீரான கால இடைவெளியில், இரத்த அழுத்தத்தைப் பரிசோதனை செய்துகொள்வதன் மூலம் மாரடைப்பைத் தடுக்கலாம்.

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு, இரத்தத்தில் அதிக சர்க்கரை சேருவதால் அது இதயத் தசைகளைப் பாதிக்கலாம். அல்லது இருதயத்துக்குச் செல்லும் இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுத்தும் கொழுப்பின் அளவை அதிகப்படுத்தலாம். இரத்த அழுத்தத்தை உண்டாக்கலாம். இதனால் எளிதில் மாரடைப்பு வந்துவிடும்.

கொழுப்பில் ஐந்து விதமான கொழுப்புகள் உண்டு. அவற்றுள், எல்.டி.எல். என்பது (Low-density lipoprotein) கெட்ட கொழுப்பு. எச்.டி.எல். என்பது (High-density lipoprotein) நல்ல கொழுப்பு. உட லில் நல்ல கொழுப்பின் அளவு, கெட்ட கொழுப்பைவிட அதிகமாக இருக்க வேண்டும்.

இதற்கு மிக அவசியமானவை, உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி. உணவுக் கட்டுப்பாட்டைப் பொறுத்தளவில், எண்ணெய்யில் பொரித்த, வறுத்த உணவுகளை தவிர்க்கவேண்டும்.

சமையலுக்காக சூரியகாந்தி எண்ணெய், நல்லெண்ணெய், கடலெண்ணெய், ஒலிவ் எண்ணெய் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். அதுவும் இவற்றை  வாரந்தோறும் ஒன்று மாற்றி ஒன்றைப்  பயன்படுத்துவதால், இவை  ஒவ்வொன்றிலுமுள்ள தனித்துவமான குணங்கள் பூரணமாகக் கிடைக்கும். ஆனால் எந்த எண்ணெய் ஆயினும் பொரித்து சாப்பிடுவது ஆபத்தானது.

இறுதியாக மன உளைச்சல். நீங்கள் வேகமாக நடக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். பத்து நிமிடங்கள் தொடர்ந்து நடக்கும்போது, இரத்த அழுத்தம், சாதாரண நிலையான 120லிருந்து படிப்படியாக 160, 180 என்று கூடிச் செல்லும்.

ஆனால், உங்களுக்குள் ஏற்படும் கோபம் அல்லது கவலையால், உங்கள் இரத்த அழுத்தம் ஒரே நொடியில் அதிகரிக்கிறது. சாதாரணமாக இயங்கும் இதயம், 
வேகமாக இயங்குவதால் அது செயலிழக்கிறது. இதனால்தான், பலரும், கடுமையான மன உளைச்சலின்போது, இதயம் செயலிழந்து மரணிக்கின்றனர்.

இதைத் தவிர்ப்பதற்கு மனதுக்குப் பயிற்சி கொடுக்கவேண்டும். யோகா, தியானம், இனிமையான இசை, மனதை அமைதிப்படுத்திக் கொள்ளப் பழகிவிட்டால், மன உளைச்சலால் மாரடைப்பு ஏற்பட வாய்ப்பிருக்காது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The reasons for heart attack and prevention.


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->