வெயில் காலத்தில் சுரைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் ஏராளமான நன்மைகள்.! - Seithipunal
Seithipunal


சுரைக்காய் உடல் சூட்டை குறைக்கும். சுரைக்காயில் வைட்டமின் பி, சி சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. சுரைக்காயின் சதை பகுதியில் ரசம் செய்து அதில் எலுமிச்சை பழச்சாறு சேர்த்து பருகினால் சிறுநீரக கோளாறு, சிறுநீர் கட்டு, நீர் எரிச்சல், நீர்க்கட்டி போன்ற பிரச்சனைகள் தீரும். 

நீரிழிவு நோய் உள்ளவர்கள் இதனை அடிக்கடி சாப்பிடுவதால் ரத்தத்தின் சர்க்கரை அளவு குறையும். அதிக உஷ்ணத்தால் வரும் தலைவலியை போக்க சுரைக்காய் சதை பகுதியை அரைத்து நெற்றியில் பற்று போட வேண்டும். 

அஜீரண கோளாறு இருப்பவர்களுக்கு சுரைக்காய் ஒரு மருந்தாக பயன்படும். கோடை காலங்களில் சுரைக்காய் சாப்பிடுவதால் தாகம் ஏற்படாது. 

மேலும் உடலில் வளர்ச்சியை போக்கி நீர் தன்மையுடன் வைத்துக் கொள்ளும். கை,கால் எரிச்சல் உள்ளவர்கள் சுரைக்காயை மசித்து எரிச்சல் உள்ள இடங்களில் வைத்து கட்டினால் குணமடையும். 

உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள சுரக்காய் வாரத்திற்கு இரண்டு முறை சாப்பிடுவது நல்லது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் அடிக்கடி சுரக்காய் சாப்பிடுவது நல்ல ஒரு மாற்றத்தை கொடுக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SORAKKAI health benefits in tamil


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->