பெண்கள் கருவுறுதலுக்கு சரியான வயது இதுதான்.! இதனை தாண்டினால் ஏற்படும் பிரச்சனைகள்.!!   - Seithipunal
Seithipunal


பெண்களுக்கு பருவ வயதின் போது பருவமடைதல் எவ்வுளவு முக்கியமான கால கட்டத்தை கொண்டதோ அதே போன்று கர்ப்படைதலும். கர்ப்பமடையும் நேரத்தில் பெண்ணின் மனதும்., உடலும் ஒத்துழைக்கும் பட்சத்தியேயே அவர்களால் கருவுற இயலும். அந்த சமயத்தில் அவர்களின் உடல் நிலையானது ஆரோக்கியமாக இருக்கும் பட்சத்தில்., அவர்களால் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க இயலும். அந்த வகையில்., பெண்கள் அவர்கள் கருத்தரிப்பதற்கான சரியான வயதை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். மேலும்., குறிப்பிட்ட வயதை தவிர பிற வயதில் கருவுற்றால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டும்.

20 வயது முதல் 24 வயது வரை: 

20 வயது முதல் 24 வயது வரை உள்ள காலகட்டத்தில் மாதவிடாய் சுழற்சியானது சரியாக இருக்கும். இந்த காலத்தில் திருமணம் முடிந்து கருவுற்றால் உயர் இரத்த அழுத்த நோய்கள் மற்றும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் நீரழிவு நோய்கள் போன்ற பிரச்சனைகளால் அவதியடையும் பிரச்சனை குறையும். இந்த வயதில் சரியான உடல் வளர்ச்சி இல்லையெனில் சில பிரச்சனைகள் வர கூடும். மேலும்., இந்த காலத்தில் 9.5 விழுக்காடு அளவிற்கான கருச்சிதைவு ஏற்படும் அபாயமும் உள்ளது.

25 வயது முதல் 29 வயது வரை: 

25 வயது முதல் 29 வயது வரை உள்ள பெண்கள் உடலுக்கு தேவையான உடற்பயிற்சி மற்றும் உடலுக்கு சத்தான உணவு பழக்கவழக்கத்தை வைத்திருக்கும் பட்சத்தில் கர்ப்பமடைதலில் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். மேலும்., இந்த வயதே கருவுறுத்தலுக்கான சரியான வயதாகும். இதன் மூலமாக பெண்களுக்கு பெரும்பாலும் ஏற்படும் மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்ப பை புற்றுநோய் ஏற்படும் அபாயமானது குறைகிறது. இந்த வயதில் இருக்கும் பெண்கள் பெற்றோராகுவதற்கு ஏற்பட வயதாகும். இந்த வயதை கொண்ட பெண்களுக்கு சுமார் 10 விழுக்காடு அளவிற்கான கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளது. 

30 வயது முதல் 34 வயது வரை: 

30 வயது முதல் 34 வயது வரை உள்ள பெண்களுக்கு தங்களின் 30 வயதை நெருங்கும் சமயத்தில் கருவுறும் திறனானது குறைந்து விடும். இந்த வயதுடைய பெண்கள் தேவையான சிகிச்சையை எடுத்து கொள்வது நல்லது. இந்த நேரத்தில் கருத்தரிப்பானது சுமார் 25 விழுக்காடு அளவு முதல் 28 விழுக்காடு அளவிற்கு மட்டுமே சாத்தியம். இன்றுள்ள பெருபாலான பெண்கள் அறுவை சிகிச்சை மூலமாக குழந்தைகளை பெற்றெடுக்க எந்த விதமான மறுப்பும் தெரிவிக்காத நிலையில்., வாழ்க்கையிலும் ஓரளவு நிலைத்துவிடுவதால் குழந்தைகளுக்கு பெற்றோராக இருக்க நல்ல வாய்ப்புள்ளது. இந்த வயதில் கருச்சிதைவு ஏற்படுவதற்கு சுமார் 11.7 விழுக்காடு அளவிற்கு வாய்ப்புள்ளது. 

35 வயது முதல் 45 வயது வரை: 

35 வயது முதல் 45 வயது வரை இருக்கும் பெண்களுக்கு அவர்களின் 38 வயதில் மாதவிடாய்யானது நிற்கும் நிலையில் இருக்கும். இந்த வயதில் குழந்தையை பெற்றெடுப்பது கடினமான ஒன்றாகும். மேலும்., உடலில் அதிகரிக்கும் உயர் இரத்த அழுத்தம்., கர்ப்ப கால நீரழிவு நோய் போன்றவை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த சமயத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்வதன் மூலமாக குழந்தையை பெற்றெடுக்க அதிகளவு வாய்ப்புள்ளது. இந்த சமயத்தில் கருவுற்றால் இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் பிறக்கவும்., கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்பானது சுமார் 18 விழுக்காடு அளவிற்கும் அமையும். 

40 வயதை கடந்த பெண்கள்: 

40 வயதை கடந்த பெண்கள் கருவுறுதலுக்கான சிரமம் அதிகமுள்ள வயதாகும். இந்த வயதில் கருவுற விரும்பும் பட்சத்தில் சுமார் 25 விழுக்காடு அளவிற்கான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்த சமயத்தில்., உயர் இரத்த அழுத்தம்., குறைப்பிரசவம் மற்றும் வயிறு சம்பந்தமான நோய்களால் அவதியுற நேரிடும். இந்த நேரத்தில் உடலின் ஆற்றல் குறைவதால் சுமார் 24 விழுக்காடு முதல் 55 விழுக்காடு அளவிற்கு கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

right age to get pregnant


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->