குழந்தைகள் விரல் சூப்புவதை குறைப்பதற்கு அல்லது தவிர்ப்பதற்கு எளிய ஆலோசனைகள்.!! - Seithipunal
Seithipunal


சிறுவயதில் இருக்கும் குழந்தைகள் பெரும்பாலும் அவர்களின் விரலை சூப்பிக்கொண்டே இருப்பது வழக்கம். இந்த பழக்கத்தை முதலிலேயே கவனித்து அதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்காமல் இருக்கும் பட்சத்தில் பெரும் பின் விளைவை சந்திக்க நேரிடும். 

குழந்தைகள் தாயின் வயிற்றில் இருக்கும் சமயத்தில் தொடரும் இந்த பழக்கமானது., தனிமையை உணரும் பட்சத்தில் மீண்டும் குழந்தைகள் தங்களின் விரலை சூப்ப துவங்குகின்றனர். பொதுவாகவே இந்த விரல் சூப்பும் பழக்கம் குழந்தைகளுக்கு இரண்டு வயதுவரை இருக்கலாம். மேலும்., பெரும்பாலான குழந்தைகளுக்கு 7 வயது வரையிலும் விரல் சூப்பும் பழக்கமானது பின் தொடரும். 

குழந்தைகள் விரல் சூப்பிக்கொண்டு இருந்தால் அவர்களை அடித்து அல்லது மிரட்டி பணியவைத்து விடலாம் என்ற எண்ணமானது முற்றிலும் தவறானது. அவ்வாறு செய்யும் பட்சத்தில் இந்த பழக்கமானது அதிகமாகுமே தவிர., கண்டிப்பாக குறையாது. குழந்தைகள் விரலை சூப்பும் சமயத்தில் அவர்களின் விரலை வலுக்கட்டாயமாக எடுப்பது., உங்களின் மீதான வெறுப்பை அதிகரிக்கும். அவர்களிடம் எளிமையாக பேசி இந்த விஷயத்தை சாதிக்க வேண்டும். 

முடிந்தளவு குழந்தைகளின் கவனத்தை திசை திருப்பி., குழந்தைகள் பிற பொருட்களின் மீது ஆசை அல்லது ஆர்வம் வைத்திருந்தால் அந்த பொருளை வழங்கி மெல்ல மெல்ல விரல் சூப்பும் பழக்கத்தை நிறுத்தி கொள்ளலாம். அவர்களின் ஏக்கத்தை தெரிந்து கொண்டு மகிழ்ச்சியான சூழலை உருவாக்கி., அவர்களின் போக்கில் விளையாட அனுமதி அளிக்க வேண்டும். கண்கள் மற்றும் கைகளை ஊக்கப்படுத்தும் விளையாட்டுகளை அனுமதிக்கலாம். விரல்கள் தொடர்ந்து வேலை செய்து கொண்டு இருந்தால் விரல் சூப்புவதற்கு எண்ணம் வராது.

பெரும்பாலும் உறங்குவதற்கு முன்னர் குழந்தைகள் விரல் சூப்புவதற்கு இயற்கையாகவே தோன்றும். அந்த சமயத்தில் அவர்களை மடியில் அமர வைத்து அவர்களிடம் பல விதமான கதைகளை கூறிக்கொண்டு வந்தோம் என்றால்., அவர்களின் அன்பையும் நமது அன்பு மற்றும் அரவணைப்பை புரிந்து கொண்டு கதையை கேட்டு சிறிது நேரத்தில் விரல் சூப்பாமல் உறங்கிவிடுவார்கள். 

குழந்தைகளின் இரண்டு வயது வரை முடிந்தளவு தனிமையில் விடும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும். இந்த சமயத்தில் குழந்தைகளுடன் முடிந்தளவு நீண்ட நேரத்தை செலவழித்து., புதுப்புது விளையாட்டுகளை காட்டி., கதை சொல்லி., அவர்களின் சின்ன சின்ன அசைவுகளின் உங்களின் புன்னகையை காண்பித்து வந்தால் அவர்களின் மனதும் உற்சாகமடையும்., விரல் சூப்பும் எண்ணத்தை மறந்துவிடுவார்கள். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

reduce the fingers of children


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->