பூரான் கடித்தால் என்ன செய்வது? படித்துவிட்டு பகிருங்கள்!! - Seithipunal
Seithipunal


 

விஷ பூச்சிகளில் ஒன்றான நூறுகால் பூச்சி நம்மை கடித்தால் என்ன செய்வது என்று தெரிந்துகொள்ளுங்கள். நூறுகால் பூச்சி தான்  பூரான் என்று அனைவராலும் அறியப்படுகிறது. இது சுமார்  5 அங்குலம் முதல் 7 அங்குல நீளமுடையது. பூரான் மிகவும் சுறுசுறுப்பான பிராணி. பூச்சிகளைத் தின்று வாழும். எப்போதும் திரிந்துக் கொண்டே இருக்கும். இதில் பல பிரிவுகள் உண்டு. பூரான் பக்கவாட்டில் கணக்கற்ற கால்கள் உண்டு. இது நீண்டு வளர்ந்திருக்கும். கெட்டியான தலையின் முன் பக்கத்தில் உணர்வு இலை இருக்கும்.

                                                      

பூரான் கடிக்கும்போது வலியே தெரியாது. இரண்டு நாட்களுக்குப் பிறகே வலி அதிகமாக தெரியும்.
 
பூரான் கடித்தால், உடலில் பல இடங்களில் அதிக தடிப்பும், அரிப்பும் எரிச்சலும் ஏற்படும்.  பூரான் கடித்தது தெரிந்த உடன்,  முதல் சிகிச்சையாக மண்ணெண்ணெயை விட்டு நன்றாகத் தேய்க்க தடிப்புகள் மறையும். பனைவெல்லாம் சாப்பிடவேண்டும்.

 பூரான் கடித்தால் என்ன செய்வது?

குப்பைமேனி இலை மற்றும் உப்பு ஆகிய இரண்டையும் நன்றாக அரைத்து கொள்ளவும் அதனுடன் சிறிது மஞ்சள் சேர்த்து இடித்து உடல் முழுவதும் நன்றாகப் பூசவும். ஒரு மணி நேரத்திற்கு  பிறகு சுத்தமான நீரில் குளிக்கவேண்டும். மூன்று நாட்கள் காலையில் மட்டும் இவ்வாறு செய்து வர தடிப்பும் அரிப்பும் மறையும்.

வெற்றிலைச் நன்றாக அரைத்து அதில் வரும் சாற்றை சுமார் 6 அவுன்ஸ் எடுத்து அதில் 35 கிராம் மிளகை ஒரு நாள் முழுவதும் ஊற வைக்கவேண்டும். ஊறிய மிளகை எடுத்து உலர்த்திப் பொடி செய்து கண்ணாடி பாத்திரத்தில் வைக்கவும். இந்த மருந்தை காலை, மாலை இரண்டு சிட்டிகை அளவு வெதுவெதுப்பான நீரில்  போட்டு குடிக்க வேண்டும். உப்பு, புளி இரண்டையும் எக்காரணத்தை கொண்டும் இதில் சேர்க்கக் கூடாது.  

எளிய வழி பூரான் கடித்த இடத்தில் சுண்ணாம்பு தடவலாம். பின் மருத்துவரை அணுகலாம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pooran how to solve medical tips


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->