தமிழனை காக்க வந்தார்களா..? தட்டி தூக்க வந்தார்களா..? கமலின் தலையீட்டால் கண்ட நாடுகளுக்கு கைமாற இருக்கும் பாரம்பரியம்..? - Seithipunal
Seithipunal


தமிழகத்தை பொறுத்த வரையில் நிலவேம்பு கசாயம் தான் தற்போது அல்லோபதி மருத்துவத்தையும் தாண்டி டெங்கு விசயத்தில் கைகொடுக்கும் ஒன்றாக இருக்கிறது.

தற்போது வரை நிலவேம்பு சித்த மருத்துவ முறைகளில் ஒரு பொருளாக தான் பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது சரியான ஆராய்ச்சி முடிவு கிடைக்கும் வரை நிலவேம்பு கசாயம் விநியோகத்தில் ரசிகர்கள் ஈடுபடாமல் இருக்க நடிகர் கமல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆராய்ச்சிகளை அலோபதியாளர்கள் தான் செய்யவேண்டும் என்றில்லை, பாரம்பரியம் மிக்கவர்களே செய்திருக்க வேண்டும் எனவும், பக்கவிளைவுகள் உண்டு என்பதும் பாரம்பரியம் தான்  என்றும் கூறி இருக்கிறார்.

இப்படி நமது பழங்கால வழக்க முறைகளை பயன்பாட்டில் இருந்து தூக்கி விட்டால், இதற்கு உரிமை கொண்டாட பன்னாட்டு நிறுவனங்கள் வரிந்து கட்டிக்கொண்டு வந்து விடும்.

மஞ்சள் விவகாரத்தில் இப்படித்தான் சில காலம் நமது உரிமையை இழந்து தவித்தோம். 1995 ஆம் ஆண்டு இரு அமெரிக்க வாழ் இந்தியர்கள் (சுமன் K. தாஸ், ஹரிஹர் P. கோலி) மிஸிப்பி மருத்துவ மைய பல்கலைக்கழகத்தில் இருந்து மஞ்சள், காயங்களை ஆற்றும் தன்மை கொண்டதைக் கண்டுபிடித்துள்ளதாக கூறி காப்புரிமை பெற்றனர். (காப்புரிமை எண்: 54015041).

இதை எதிர்த்து இந்திய தொழில்துறை ஆராய்ச்சி மற்றும் மருத்துவ கழகம் “பழங்காலக் கலை” என்ற அடிப்படையில் வழக்குப் பதிவு செய்தது.

இதன் கூற்றுப்படி மஞ்சளின் காயங்களைக் குணப்படுத்தும் திறன் பழங்காலத்திற்கு முன்பே கண்டறியப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்கு ஆதாரமாக இந்திய மருத்துவக் கழகம் 1953 – ல் வெளியிட்ட ஒரு சஞ்சிகையையும் சமர்ப்பித்தது.

பின்பு அமெரிக்க காப்புரிமை மஞ்சளுக்கான காப்புரிமையை இரத்து செய்தது. ஏனெனில் கண்டுபிடிப்பு என்பது.

  1.     தனித்தன்மை
  2.     புதியதாக
  3.     பயன்படக்கூடியதாகஇருக்க வேண்டும்.

மஞ்சள் வழக்கு தனித்தன்மை மற்றும் புதியதாக இல்லை ஆதலால் இரத்து செய்யப்பட்டது. இந்த நிலைமை நிலவேம்பு விசயத்திலும் ஆகி விடக்கூடாது என்பது தான் தற்போது சமூக ஆர்வலர்களின் ஆதங்கமாக உள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nilavembu kashayam or Nilavembu Kudineer is being pushed by the government of Tamil Nadu for the treatment of Chikungunya and Dengue fever. The kashayam is a mixture of nine herbs and its public use was approved during chikungunya outbreak during Jayalalithaa’s tenure.


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->