நோய் இல்லாமல் வாழ இது இருந்தால் போதுமா: காசே செலவில்லாமல் ஆரோக்யமாக வாழ்வது எப்படி!! - Seithipunal
Seithipunal


மனிதன் ஆரோக்யமாக வாழ பல காரணிகள் தேவை. நவீன மருத்துவம் நாம் உண்ணும் உணவை மேக்ரோ நியூட்ரியன்ட் மற்றும் மைக்ரோ நியூட்ரியன்ட் என இருவகையாகப் பிரித்துள்ளது.

மைக்ரோ நியூட்ரியன்ட் என்பது நம்முடைய வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆண்டி ஆக்ஸிடண்டுகளைக் குறிக்கும்.

இந்த மைக்ரோ நியூட்ரியன்ட் மனிதனை நோய் இல்லாமல் வாழ்வதற்கும், தினமும் உயிர் வாழ தேவையான ஆற்றலைக் கொடுப்பதற்கும், பல்வேறு உடல் உறுப்புகள் தொய்வில்லாமல் வேலை செய்யவும் பயன்படுகிறன.

இந்த மைக்ரோ நியூட்ரியன்ட்களில் முக்கியமான விட்டமின்கள் A, D, E, K எனப்படும் கொழுப்பில் கரையும் விட்டமின்களும், B, C எனப்படும் நீரில் கரையும் விட்டமின்கள், மக்னீசியம், கால்சியம், சோடியம், பொட்டாசியம், ஜின்க், செலேனியம் என்ற மினரல்கள், மற்றும் ஆண்டி ஆக்ஸிடண்டுகள் ஆகும். 

இதில் வைட்டமின் D அனைத்து வைட்டமின்களிலும் முதன்மையாக கருதப்படுகிறது. சமீபத்திய ஆய்வுகள் D வைட்டமினை மனித உடலின் இயக்கத்திற்கும், 200க்கும் மேற்பட்ட நோய்களில் இருந்து மனிதனை காக்கும் சக்தி உள்ளது என்றும் பல ஆய்வுகளின் மூலம் உறுதி செய்துள்ளது.

வைட்டமின் D ஆல் என்ன  நன்மைகள் கிடைக்கும்.

  • நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது
  • கால்சியம் உடலில் கிரகித்துக் கொள்ள ஊக்கியாக பயன்படுகிறது.
  • கல்லீரல் மற்றும் கணையத்தின் பயன்பாட்டை அதிகரிக்கிறது.
  • ரத்த சுத்திகரிப்புக்கு உதவுகிறது.
  • சீறுநீரக செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
  • எலும்புகளை பலபடுத்து'றது. D குறைபாட்டினால் பெருமளவு எலும்பு சம்மந்தமான நோய்கள் உருவாகும்.
  • நுரையீரல் ஆரோக்யமாக இருக்க உதவுகிறது.
  • சளி, ப்ளு போன்ற நோய்களில் இருந்து பாதுகாக்கிறது.
  • இருதயத்தில் படியும் கால்சியம் படிமத்தைக் குறைகிறது.
  • ரத்த அழுத்ததை சீராக வைக்க உதவுகிறது.
  • எல்லா சுரப்பிகளும் தங்களின் செயலை செய்வதற்கு ஊக்கியாக உள்ளது.
  • மூளை மற்றும் தண்டுவடத்தை பாதுகாக்கிறது.

வைட்டமின் D மனிதக் குலத்திற்கு ஒரு இன்றியமையாத ஊட்டச்சத்து ஆகும்.  இந்த வைட்டமின் D மனிதனுக்கு 30-1௦௦ng/dl  என்ற அளவில் இருக்க வேண்டும். 20 ng/dl க்கு கீழ் செல்லும்போது பல உடல் நலக் குறைவுகள் ஏற்படும்.

மனிதனுக்கு இறைவன் கொடுத்த குடையாக இந்த விட்டமின் D நமக்கு சூரிய ஒளியின் மூலம் கிடைக்கிறது. தினமும் ஒரு மணி நேரம் நல்ல சூரிய ஒளியில் உடலின் பாகங்கள் வெய்யிலில் படுவது போல் இருப்பது உடலுக்கு தேவையான வைட்டமினைப் பெற உதவும்.

இருபதுக்கும் குறைவான அளவுகள் இருந்தால்  மருத்துவரின் ஆலோசனைகளைப் பெற்று ஆண்டுக்கு ஒருமுறை பன்னிரண்டு வாரங்கள் வைட்டமின் D மாத்திரை 60,௦௦௦ IU வாரத்திற்கு ஒரு மாத்திரையோ அல்லது, தினமும் 5,௦௦௦ IU மாத்திரைகளோ உட்கொள்ளலாம்.  குறிப்பிட்ட கால அளவுகில் வைட்டமின் D அளவுகளை சரிபார்ப்பது நம்மை பல நோய்களில் இருந்து காக்கும்.

நாளை வைட்டமின் பி பற்றிய தகவலைப் பாப்போம்.

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Micro Nutients


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->