மண்டையை பிளக்கும் வகையில் அடித்து தூக்கும் வெயில்.!! நமது உடலை எளிய முறையில் பாதுகாப்பது எப்படி.!!  - Seithipunal
Seithipunal


இன்னும் மே மாதமே துவங்கவில்லை., வெயில் ரண கொடூரமாக வெளுத்து வாங்குகிறது. இந்த வெயிலின் காரணமாக நமது உடலின் நீரானது அதிகளவு உறிஞ்சப்பட்டு., தேவையான அளவுக்கு நீர் அருந்தவில்லை என்றால் நமது உடல் கடுமையான பாதிப்பை சந்திக்கும்.  

தினமும் தேநீர் மற்றும் காபி அருந்துவதற்கு பதிலாக பாலில் இரண்டு தே.கரண்டி அளவிற்கு வெண்ணையை சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் வெப்பமானது குறையும். இந்த முறையில் உடற்பயிற்சி செய்து உடலை ஆரோக்கியமாக வைக்கும் நபர்கள் மேற்கொள்ளலாம். இந்த முறையின் மூலமாக உடலின் கொலஸ்ட்ராலானது வெகுவாக அதிகரிக்கும். 

தினமும் உண்ணும் பொருட்களில் வைட்டமின் சி இருப்பதை கவனித்து கொள்ள வேண்டும். அந்த வகையில்., வைட்டமின் சி சத்துக்களை கொண்ட உணவு பொருட்களான ஆரஞ்சு பழம்., எலுமிச்சை பழம் போன்றவற்றை சாப்பிட வேண்டும். இதனை வழக்கமான முறையில் சாறுகள் போலவும் உட்கொள்ளலாம். இதன் மூலமாக உடலின் வெப்பமானது குறையும். 

கிராமங்களில் பெரும்பாலும் கோடை காலத்திற்கு முன்னதாக அதாவது பங்குனி மாதத்தின் இறுதியில் திருவிழாக்கள் நடைபெறும். அந்த நேரத்தில் பக்தர்களுக்கு மோர் வழங்கும் வழக்கம் உண்டு. மோரில் இருக்கும் வைட்டமின்கள்., கனிமச்சத்துக்கள் மற்றும் ப்ரோபயாட்டிக்குகளின் காரணமாக நமது உடலின் வெப்பமானது குறையும். அந்த நேரத்தில்., பலர் விரதம் இருந்து வந்திருக்கும் பட்சத்தில்., வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் விளைவுளை குறைக்கவே மோர் வழங்கப்படுகிறது. 

கடைகளில் இருக்கும் புதினாவை வாங்கி வந்து அதன் இலைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து., அந்த சாற்றை வடிகட்டி தென் கலைந்து குடித்து வந்தால்., உடலின் வெப்பமானது வெளியேற்றப்பட்டு., உடல் குளிர்ச்சியடையும். 

இல்லங்களில் இருக்கும் சோம்பை ஒரு கையளவிற்கு எடுத்து கொண்டு., இரவு முழுவதும் நீரில் ஊற வைத்த பின்னர் காலையில் அந்த நீரை குடித்து வந்தால் உடலின் வெப்பமானது தனிக்கப்பட்டு., உடலுக்கு குளிர்ச்சி கிடைக்கும். 

கற்றாழை செடியில் இருக்கும் கற்றாழை ஜெல்லை எடுத்து முகத்தில் தடவி சுமார் 20 நிமிடங்களுக்கு பின்னர் முகத்தை கழுவி வந்தால் உடலுக்கு குளிர்ச்சி ஏற்படுவதை உணர முடியும். மேலும்., கற்றாழை ஜெல்லை எடுத்துக்கொண்டு அதனுடன் சிறிதளவு தேனை ஊற்றி குடித்து வந்தால் சூடு பிடிப்பது தவிர்க்கப்படும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to ready summer season against heat problem


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->